Thursday, July 15, 2010

ரஞ்சிதா, நித்தியானந்த உறவு அம்மாவுக்கும் மகனுக்கும் இருக்கும் தாய்-பிள்ளை(!) உறவு

ரஞ்சிதா அம்மா... நித்தியானந்தா பிள்ளை!
ஆசிரமத்தில்... படுஜாலி நித்தி!

''ஜெயிலில் இருந்த காலத்தில் என் உடல் மட்டும் உள்ளே இருந்தது. ஆன்மா ஆசிரமத்துக்குள்தான் சுத்திட்டு இருந்தது. ஜெயில், கோர்ட் எல்லாம் எப்படி இருக்கும்? இ.பி.கோ-ன்னா என்ன? இப்படிப் பல புது விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கு கிடைத்த வாய்ப்பாகத்தான் நடந்து முடிந்த விஷயங்களை நான் பார்க்கிறேன்!'' - மறுபடியும் ஜம்மென உட்கார்ந்து பிரசங்கம் செய்யத் தொடங்கிவிட்டார் நித்தியானந்தா. பக்தர்களும் விடாப் பிடியாக சிலிர்க்க... கடந்த 11-ம் தேதி 'சுதந்திரம்' என்ற தலைப்பில் நித்தி நடத்திய பிரசங்கம், ஆசிரம ஆதரவுப் புள்ளிகளுக்கு நம்பிக்கையைக் கூட்டி இருக்கிறது!

''சுவாமியின் ஆன்மிக உரைக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், 'இனி மாசத்துக்குஒருமுறை காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்துப் போட்டால் போதும்!' என்றும் சொல்லிவிட்டது. இனி வழக்கம்போல மக்களை சந்திப்பார். நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் காரணமே, சுவாமி தினமும் செய்யும் பஞ்ச தபசு யாகம்தான்.

ஒவ்வொரு வருடமும் ஆடி மாசத்தில் முதல் பௌர்ணமி தினத்தை குரு பூர்ணிமான்னு சொல்வோம். அன்று ராத்திரி முழுக்கத் தூங்காம பக்தர்களுக்கு சுவாமி ஆசீர்வாதம் வழங்கு வார். இந்த வருஷம் அதைக் கொண்டாட முடியாமல் போயி டுமோன்னு கவலையோட இருந்தோம். நல்லவேளை எல்லாம் சுமுகமாகிடுச்சு. ஆசிரம வளாகத்தில் புதிதாக உருவாக்கி இருக்கும் 21 அடி நவபாஷாண லிங்கத்துக்கும் குரு பௌர்ணமி தினத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு பண்ணியிருக்கோம்...'' என்றார் ஆசிரமத்தில் அடைக்கலம் ஆகிவிட்ட பக்தர் ஒருவர்.

பிரசங்கத்தின்போது கூடியிருந்த பக்தர்களைப் புன்னகையோடு ஏறிட்டநித்தியானந்தா, ''அகிம்சை வழியில் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். எவ்வளவோ பிரச்னைகள் வந்தபோதும், 'அமைதியா இருங்க... எல்லாம் தன்னால் சரியாகும்'னு பக்தர் களிடமும், சீடர்களிடமும் சொல்லிட்டு இருந்தேன். இன்னிக்கு எல்லாமே தன்னால் சரியாகி இருக்கு. என் பேருக்கு முன்னாடியும் பின்னாடியும் பல பட்டங்களைக் கொடுத்து அசிங்கப்படுத்தினாங்க. என் பேரை பல பேர் 'நித்தி'ன்னு சொல்ற அளவுக்குக் கொண்டுவந்துட்டாங்க. அதைப்பத்தி கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது?

ஒண்ணு தெரியுமா? மைக்கேல் ஜாக்சன் இறந்த போது, அவரைப்பற்றிய செய்திகளையும் வீடியோவையும் பார்க்க ஒட்டுமொத்த உலக மக்களும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்தாங்க. ஒரு கட்டத்தில் இன்டர்நெட்டே ஜாமாகிவிட்டதாம். அதற்கு அடுத்தபடியாக, என்னைப்பத்தி வீடியோ வையும் செய்தியையும் பார்க்கும்போதுதான் அதே போல இன்டர்நெட் ஜாமாகி இருக்கிறது (இதிலுமா ஒரு பெருமை!). உலகத்தில் கூகுள் தேடு தளத்தில் அதிகம் தேடப்பட்டது நான்தான்னு சர்வே ரிப்போர்ட் சொல்லுது (போலீஸ் தேடியதைவிடவா?)'' என்று நித்தியானந்தா வாய்விட்டுச் சிரித்தபடி சொல்ல... பக்த கோடிகளின் சீரியஸான கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

சொற்பொழிவுக்குப் பிறகு பக்தகோடிகள் கியூ கட்டி நிற்க... ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதங்களையும் பிரசாதங்களையும் அள்ளி வழங்கினார் நித்தியானந்தா. டி.வி. சீரியல் நடிகை மாளவிகா அவரது காலில் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

இதற்கிடையில், பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் அகில பாரத இந்து மகா சபை சார்பாக நித்தியானந்தா படத்துக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. அந்த அமைப்பின் கர்நாடக மாநிலத் தலைவர் வாசுதேவராவ் கஷ்யப்பா, ''நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தரைவிட வயதில் மூத்தவர். அவங்க ரெண்டு பேருக்கும் இருப்பது, அம்மாவுக்கும் மகனுக்கும் இருக்கும் தாய்-பிள்ளை(!) உறவு. இந்துக்களுக்கு எதிராக சதி செய்யும் விதமாகத்தான் காங்கிரஸ் இப்படிப்பட்ட கட்டுக் கதைகளைப் பரப்புகிறது!'' என்று போட்டாரே ஒரு போடு


source:vikatan


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails