சிவமொக்க: கொடூர குணம் கொண்ட பத்து அடி நீளமுள்ள கருநிற ராஜநாகம், கர்நாடக மாநிலத்தில் உயிருடன் பிடிபட்டது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா அடுத்த பாரதி நகர் அருகில், ஐஹொரில் கிராமத்திற்கு வெளியே சாலை ஓரத்தில் மிகப் பெரிய கருநிற ராஜநாகம் பதுங்கி இருப்பதை அப்பகுதி மக்கள் கடந்த 28ம் தேதி மாலை பார்த்தனர். உடனடியாக இப்பகுதியில் பாம்புகளை பிடிப்பதில் நிபுணரான கிரண் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், விரைந்து வந்து, கடும் விஷம் வாய்ந்த 10 அடி நீளமுள்ள கருநிற ராஜநாகத்தை உயிருடன் பிடித்தார். இதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கருநிற ராஜநாகத்தை, கிரண் உதவியுடன் வனத்துறையினர், செட்டஹல்லி காட்டு பகுதிக்கு கொண்டு விட்டனர்.
source:dinamaalr
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment