இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் இந்து கோவில் ஒன்று உள்ளது. 87 வருடங்களுக்கு முன் 1923ம் ஆண்டில் லாலா தன்சுக் ராய் என்பவரால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.
இந்தக் கோவிலை இடிக்க ராவல்பிண்டி மாகாண அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து நேற்று அக்கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது.
இதையறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து, சீ்க்கிய பக்தர்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்துக்கு அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களும் ஆதரவு தெரிவித்ததால் நிலைமை மோசமடைந்தது.
இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து கோவில் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
http://thamilislam.tk
No comments:
Post a Comment