Saturday, July 24, 2010

இந்த வார அப்லோட் டவுண்லோடர்


இணையத்தில் பல தளங்கள், பைல்கள் ஸ்டோர் செய்வதற்கென செயல்படுகின்றன. இவற்றில் நம் விருப்பத்திற்கு ஏற்ப பைல்களை அப்லோட் செய்து வைத்து, அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். யு–ட்யூப் போன்ற தளங்களில், வீடியோக்களையும் அப்லோட் செய்து மகிழ்ச்சி அடையலாம். ஆனால் எந்த சாப்ட்வேர் புரோகிராமினையாவது டவுண்லோட் செய்திட வேண்டுமாயின்  நாம் சில தடைகளை அல்லது தாமதங்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. விளம்பரங்களையும் சந்திக்க வேண்டி யுள்ளது. சில பைல்களை இலவசமாக டவுண்லோட் செய்கையில், குறைந்தது ஒரு நிமிடமாவது காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போது அந்த தளத்திலிருந்து நம்மைப் பற்றிய தகவல்களை அறிய, ஏதேனும் புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் பதியப்படுகிறதோ என்று பயம் ஏற்படுகிறது. இந்த சிரமங்கள் எதனையும் எதிர் கொள்ளாமல், புரோகிராம்களை டவுண்லோட் செய்திட, இணையத்தில் நமக்கு இலவசமாய் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் பெயர்  Megaupload Downloader. இந்த புரோகிராம் டவுண்லோட் செய்வதற்கென உள்ள புகழ்பெற்ற தளங்களான  Megaupload, Rapidshare, Sendspace, Depositfiles, 4Shared, Mediafire, ZShare, Easyshare, Uploaded.to ஆகியவற்றிலிருந்து புரோகிராம்களை இறக்க உதவுகிறது. யு–ட்யூப் போன்ற தளத்திலிருந்தும் வீடியோ பைல்களை இறக்கிப் பதிந்து கொள்ள உதவுகிறது. இந்த புரோகிராமினை http://sourceforge.net/projects /mudownloader/  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துகையில் தொடக்கத்தில் சில சிரமங்கள் ஏற்படலாம். அடிப்படையில் இதன் இன்டர்பேஸ் இத்தாலிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதனை செட் செய்திடுகையில்,  Language  என்ற பிரிவிற்குச் சென்று ஆங்கிலத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் புரோகிராம்களைப் பட்டியலிட்டு வரிசையில் வைத்து ஒவ்வொன்றாக டவுண்லோட் செய்திடும் வசதியும் இதில் உண்டு

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails