"நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் (மக்காவாகிய) இந்த ஊரின் இறைவனை நான் வணங்குவதைத்தான், அவன் எத்தகையவனென்றால், இதை அவன் புனிதமாக்கி வைத்துள்ளான். ஒவ்வொரு பொருளும் அவனுக்கே உரியது; இன்னும் முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்" (என்று நபியே! நீர் கூறுவீராக!) (அல்குர்ஆன் : 27:91)
ஆக அல்லாஹ்வின் வழியில் அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லி பிரசாரம் பணி செய்பவர்களே, இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுச்சென்ற புனிதமான அழைப்புப்பணியை செய்தவர்கள் ஆவார்கள்! என்பதை சகோதரர்கள் குர்ஆன், ஹதீதை கொண்டு உணர வேண்டும். மனித கற்பனைகளில் உருவான, சுன்னத்வல் ஜமாத், JAQH, தவ்ஹீத் ஜமாத் TNTJ,மனித நீதி பாசறை மற்றும் இதுபோன்ற அமைப்புகள் சார்பாகவும், தனித் தனி பெயர்களில் செயல்படுவது சத்திய வழிகாட்டல் நூல் 41:33க்கு முற்றிலும் விரோதமானது என்பதை முஸ்லிம் சகோதரர்கள் உணர வேண்டும்.
சத்தியத்தை உணர்ந்து செயல்படவும் வேண்டும். அப்போதுதான் நாம் நமது இலக்கை அல்லாஹ்வின் மாபெரும் உதவியோடு அடைய முடியும், சத்தியம் இதுதான் என்பதை அறிந்த பின்னரும் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் புறக்கணிப்பவர்கள் பற்றி, சத்திய வழிகாட்டல் நூல் என்ன சொல்கிறது என்பதையும், நபிமொழி செய்திப்பேழை என்ன சொல்கிறது என்பதையும், பார்ப்போம்.
(மனிதர்களே!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் திட்டமாக வந்துவிட்டார்; நீங்கள் வருத்தப்படுவது அவருக்கு கஷ்டமாயிருக்கும் (நீங்கள் நேர்வழி பெற்று நன்மையடைய வேண்டுமென்று) உங்களின் மீது பேராசை கொண்டவர்(அன்றியும்) (ஓரிறை} நம்பிக்கையாளர்களின் மீது அன்பும் கிருபையும் உள்ளவர். (அல்குர்ஆன்.9:128)
No comments:
Post a Comment