அதிர வைத்த அழைப்பிதழ்!
அலுவலக சகா ஒருவர் தன் இரண்டாவது மகளின் திருமணத்திற் காக அளித்த அழைப்பிதழைப் படித்து அதிர்ந்து போனேன். பொதுவாக அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தில் பெண்ணுக்குரியோர், பிள்ளைக்குரியோர், மாமன்மார் என உறவினர்களின் பெயர்கள் வரிசையாக அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இதிலோ வித்தியாசமாக, ரிசப் ஷன் நடத்தும் ஹோட்டலில் பரிமாறப்படவுள்ள அயிட்டங்களின் பட்டியலும், ஒரு சாப்பாட்டிற்கான விலை விபரமும் அச்சிடப்பட்டு இருந்தது. "இது என்னடா புதுமை?' என வினவினேன். "புதுமையுமில்லை, புண்ணாக்குமில்லை. விருந் துக்கு வர்றவங்களுக்கு அதோட மதிப்பும், மரியாதையும் தெரிவதில்லை. பாதி அயிட்டங்களை விரயமாக்கறது மட்டுமில்லாம, நான் 125 ரூபாய் செலவுல சாப்பாடு போட்டா, 25, 50ன்னு, "மொய்' எழுதிட்டுப் போயிடுறாங்க. மொதப் பொண்ணு கல்யாணத்துல இப்படித்தான் ஏராளமா நஷ்டமாயிட்டுது; அதான்!' என்றான். சிந்தித்துப் பார்த்தால் அவன் சொன்னதிலும் அர்த்தம் உள்ளதாகத் தெரிந்தது எனக்கு.
— கோ.பார்த்தசாரதி, சென்னை.
http://www.dinamalar.com
No comments:
Post a Comment