"டிக்' அதிகாரி விடுப்பில் சென்றார்: அரசு அலுவலகத்தில் அழகருக்கு தடைநீங்கியது
மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையத்தில்"டிக்' கள்ளழகருக்கு மண்டகப்படி வைக்க மறுத்த அதிகாரி விடுப்பில் சென்றதால் வழக்கம்போல இந்த ஆண்டும் மண்டகப்படி நடைபெற உள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர்கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பாடாகி ஒவ்வொரு சமுதாய, அரசு அலுவலகங்கள், மாவட்ட உயரதிகாரிகளின் இல்லங்கள் என பல இடங்களில் தங்கிச் செல்வார். மதுரை அழகர்கோயில் ரோட்டில் தமிழ்நாடு ஓட்டல் அருகேயுள்ள மாவட்ட தொழில் மையத்திலும் "மண்டகப்படியாகி' தங்கிச் செல்வது வழக்கம். அன்னதானமும் நடைபெறும். இங்கு ஓய்வு பெற்ற அலுவலர்கள், மாறுதல் பெற்ற அலுவலர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தொகை வசூலித்து இந்நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுமேலாளர் ஆண்ட்ரூஸ் பொன்ராஜ் வைரமணி, "அரசு அலுவலகத்திற்குள் பூஜை, அன்னதானம் நடத்தக் கூடாது. வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்' என்று எதிர்ப்பு தெரிவித்தார்.(சரியாகத்தான் செய்து இருக்கிறார். இதேபோல் மதுரை புதூரில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம் நடத்தும் போது அரசாங்க இடத்தை கேட்டால் கொடுப்பார்களா?) இதனால் அதிகாரிகள், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். "28 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கத்துக்கு இந்த ஆண்டு தடைவிதிக்கப்படுகிறதே' என மனம் புழுங்கினர். மண்டகப்படிக்காக செலுத்த வேண்டிய ரூ. 6 ஆயிரம் செலுத்தி இந்த ஆண்டு நடத்தாவிடில், வரும்ஆண்டுகளில் மண்டகப்படிக்கு புதிதாக அனுமதி பெற ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்ய வேண்டும், வாய்ப்பு கிடைப்பதும் கஷ்டம் என்பதால் ஊழியர்களிடையே சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து கலெக்டர் ஜவஹரிடமும் தெரிவிக்கப்பட்டது. அதிகாரி வைரமணியிடம் கேட்டபோது, "முன்னாள் அதிகாரிகள் சிலர் இங்கு மாற்றலாகி வர முயற்சித்து பிரச்னையை பெரிதாக்குகின்றனர். இந்நிகழ்ச்சி அரசு அலுவலக செலவில் நடைபெறுவதில்லை. ஓய்வு பெற்ற ஊழியர்கள், அலுவலர்கள் வசூல் செய்து நடத்துவதால் வெளியே வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளேன். இதுகுறித்து கலெக்டரிடமும் விளக்கம் தெரிவித்து விட்டேன்' என்றார். இந்நிலையில் பொதுமேலாளர் வைரமணியை விடுப்பில் செல்லும்படி சென்னையில் உள்ள இயக்குனரகம் உத்தரவிட்டதால், அவர் 2 மாத விடுப்பில் சென்றுவிட்டார். தற்போது பொதுமேலாளராக ராமநாதபுரம் மாவட்ட பொதுமேலாளர் அரங்கண்ணல் கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த ஆண்டு தடையின்றி கள்ளழகர் அங்கு தங்கிச் செல்ல உள்ளார். காலங்காலமாக நடந்து வரும் பொதுவான கலாச்சார நிகழ்ச்சி அதிகாரியால் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது வேதனைக்குரியதே. (தினமலர் தனக்கு பிடிக்காத எந்த அதிகாரியும் விட்டுவைக்காது, சமீபத்திய உதாரணம் காமராஜர் பல்கலைக்கழக துனைவேந்தர் திரு.மருதமுத்து)
நன்றி: தினமலர்
முதலில் எல்லா அரசாங்க அலுவலகங்களில் இருந்தும் கடவுள் என்று சொல்லப்படுகிறன்றவர்களின் படங்கள் அகற்றப்படவேண்டும். மேலும் பண்டிகையை சாக்காகவைத்து பணம் வசூலித்து கொண்டுவதை தவிர்க்க வேண்டும், அதிலும் குறிப்பாக இந்த ஆயுபூஜையை சாக்க வைத்து இவர்கள் எல்லாரிடமும் பணம் வசூலித்து அதை [b]டாஸ்மார்கில் கொடுக்கும் இவர்கள் எல்லாம் பக்தர்களா? கொடுமை!!! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை சொன்னால் மட்டும் போதாது செயலிலும் காண்பிக்க வேண்டும்

No comments:
Post a Comment