Wednesday, April 2, 2008

உடான்ஸ் இந்து சாமியாரின் உடான்ஸ் பேட்டி

 கைதான சாமியார் வாக்குமூலம்
பெண் உடலில் பேய் புகுந்து என்னை பழி வாங்குகிறது
 
 
 
 
வேலூர், ஏப். 3: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதான குடியாத்தம் சாமியார், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணைப்பகுதியான ராக்கிமானப்பள்ளியில் 12 ஏக்கரில் கவுஸ் அலிஷா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவராக சலீம் கவுஸ் (48) என்பவர் உள்ளார்.

இந்த ஆசிரமத்தில் 35 பேர் கூட்டுக் குடும்பம் போல வசிப்பதாக கூறப்படுகிறது. இதில் 6 பேர் கணவன் மனைவி. தனியார் கல்லூரி மாணவர்கள் பலரும் இங்கு தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் வியாழனன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறுமாம். இதில், பலர் கலந்துகொண்டு தங்கள் சலீம் கவுசிடம் குறி கேட்பார்களாம். வேற்று மதத்தைச் சேர்ந்த சலீம் கவுஸ், இந்து மத சம்பிரதாயப்படி ஜோதிடம், கைரேகை பார்ப்பது, பேய் பிசாசுகளை ஓட்டுவதாகவும் கூறி வந்துள்ளார்.

ஆசிரமத்தில் தங்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் நோட்டில் இரவு நேர கனவுகளை பக்தர்கள் எழுதி வைப்பார்களாம். மறுநாள் அந்த கனவுகளுக்கான பலன்கள் குறித்து சலீம் கவுஸ் விளக்கம் கொடுப்பாராம்.

இந்நிலையில், ஆசிரமத்தில் அம்மூரை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஜம்புலிங்கத்தின் மகன் கபாலி(24) என்பவர் தனது மனைவி மஞ்சுமாதா(20)வுடன் தங்கியுள்ளார்.

கடந்த மாதம் இளம்பெண் மஞ்சுமாதாவை அழைத்து, சலீம் கவுஸ் தனது கால்களை பிடித்து விடும்படி கூறினாராம். அதற்கு அவர் மறுக்கவே மிரட்டி கால்களை பிடித்துவிட செய்தாராம்.

இதுகுறித்து, குடியாத்தம் தாலுகா போலீசில் மஞ்சுமாதா புகார் செய்தார். அதில் பாலியல் ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் குடியாத்தம் டி.எஸ்.பி. அருளரசு, தாலுகா இன்ஸ்பெக்டர் வின்சென்ட்பால் ஆகியோர் விசாரணை நடத்தி சலீம் கவுசை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் சாமியார் அளித்துள்ள வாக்குமூலத்தில், ÔÔமஞ்சுமாதாவுக்கு பேய் பிடித்துள்ளது. அதை விரட்டினேன். அந்த பேய்தான் இப்போது மஞ்சுமாதா உடலில் மீண்டும் புகுந்து என்னை பழிவாங்குகிறது. இது எனக்கும், பேய்க்கும் நடக்கும் போராட்டம்ÕÕ என கூறியுள்ளார்.

 http://www.dinakaran.com/daily/2008/apr/03/tamil.asp

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails