காவ்கா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் வுஜிசிக் (26) என்ற இவருக்கு, பிறவியிலேயே கைகளும், கால்களும் இல்லை. மார்பளவுச் சிலை போல நிற்கும் இவரது சாதனை மட்டும் வானுயர நிற்கிறது.
ஆம். ஊனத்தை தடையாக நினைக்காமல், தன்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்ட வெப்சைட் நடத்துகிறார் இவர். அதில் கிடைத்த புகழால் இதுவரை 19 நாடுகளுக்குப் பயணம் செய்து லட்சக்கணக்கானோரைச் சந்தித்துள்ளார்.
நம்பிக்கை ஊட்டும் வகையில் சொற்பொழிவும் செய்கிறார். கொலம்பியாவைச் சேர்ந்த அமைப்பு ஒன்றின் அழைப்பை ஏற்று அங்கு வந்துள்ள நிக், மாநாடு ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறார்.
http://dkn.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Dinakaran%20E1#



No comments:
Post a Comment