தினமலர் இணைய தளத்தை கடந்த 10 ஆண்டுகளாக பார்த்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களுடைய இதயப்பூர்வ நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்ப் புத்தாண்டு முதல் தினமலர் இணைய தளம் புதிய வடிவமைப்பில் பொலிவான தோற்றத்துடன் வெளி வர இருக்கிறது. தோற்றத்தில் மட்டுமல்லாமல் வாசகர்களுக்கு அளித்து வரும் விஷயங்களிலும் மாறுதல்கள் செய்யப்பட்டு, பல புதிய தகவல்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
Launch Date Of New Site: 13- 04- 2008
Count Down Starts:
சில முக்கிய புதிய பகுதிகள் :
இணையதளம் முழுவதும் யுனிகோடு எழுத்துருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கான இணைய தளம் என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ் மறையாம் திருக்குறளை நீங்கள் முழுமையாக பார்க்கவும் படிக்கவும் 3 பெரிய தமிழ் அறிஞர்களின் உரையுடன் முழுமையாக அளித்திருக்கிறோம். நீங்கள் விரும்பும் குறளைத் தேடிக் கண்டுபிடித்து பார்க்கவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்கள் தொடர்பான வரலாறு , சுற்றுலா உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேர்ககப்பட்டுள்ளன. இந்த பகுதியில் மேலும் பல நகரங்களின் தகவல்கள் அணி வகுக்க இருக்கின்றன.
தினமலர் இணைய தளத்தில் வெளியாகும் செய்திகளை, உங்கள் நண்பர்களுக்கு இ- மெயில் மூலம் அனுப்பவும், அந்த செய்திகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை இதர வாசகர்களும் அறிந்து கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை பிரிண்ட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் வானிலைகளை தமிழிலே அறிந்து கொள்ளலாம்
சினி வாசகர்களுக்காக சினிமா பகுதி புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது RSS Feed வசதி செய்யப்பட்டுள்ளது
வாசகர்களை ஆச்சரியப்படுத்த இதுபோன்ற மேலும் பல புதிய பகுதிகளுடன் உங்களைத் தேடி வரும் தினமலர் இணைய தளத்தில் காணப்படும் புதுமைகள் குறித்து வாசகர்களின் மேலான விமர்சனங்களை வரவேற்கிறோம். உங்கள் கருத்துக்கள் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும். http://www.dinamalar.com/
No comments:
Post a Comment