| |||||||||||
|
அப்துல் கலாமிற்கு அரஸ்ட் வாரண்ட்!
|
குடியரசுத் தலைவராக அப்துல் கலாமும், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வி.என். காரேயும் இருந்தபோது, அவர்களுக்கு எதிராக குஜராத் மாநில நீதிபதி ஒருவர் கைது உத்தரவுகளைப் பிறப்பித்தார்! எந்தக் குற்றத்திற்காக? யார் செய்த புகாரின் பேரில்? என்று கேட்கத் தோன்றுகிறதா?
யாரும் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. காசு கொடுத்தால் யாருக்கு எதிராக வேண்டுமானாலும் கைது உத்தரவை பெற முடியும்... என்று கூறப்பட்டதை நிரூபிக்க, ஸீ தொலைக்காட்சியின் செய்தியாளர் விஜய் சேகர், இதையே 'பணியாகச் செய்யும்' ஒரு வழக்கறிஞரைப் பிடித்து அவரிடம் ரூ.40,000 பணத்தைக் கொடுத்து, அன்று குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமிற்கு எதிராகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.என். காரே-க்கு எதிராகவும் கைது உத்தரவுகளைப் பெற்றார்.
பணத்தைக் கொடுத்தால்... எந்த வழக்கு, விசாரணையும் இன்றி கைது உத்தரவைப் பெற முடியும் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க, இதனைச் செய்து அதை ஸீ தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப, நீதிமன்றத்தின் நிலை குறித்து நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
நீதித் துறையிலும் ஊழல் வேர்விட்டுப் பரவத் தொடங்கிவிட்டது என்பதையே தனது முயற்சியின் மூலம் செய்தியாளர் விஜய் சேகர் நாட்டிற்கு தெரியப்படுத்தினார். உண்மையை மிக ஆதாரப்பூர்வமாக வெளிக்கொணர்ந்த அவரை பாராட்டாமல், அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து, மன்னிப்புக் கேள்... இல்லையென்றால் தண்டனை என்று கூறி, மன்னிப்பு கேட்பதற்கு 6 மாத கால அவகாசத்தையும் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்!

"உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிராகக் கூட எந்த புகாரும் அளிக்கப்படாமல், வழக்குப் பதிவு செய்யப்படாமல் கைது உத்தரவு பெற முடியும் என்ற நிலை உள்ளதையே விஜய் சேகரின் நடவடிக்கை வெளிப்படுத்தியுள்ளது" என்றும், "பொது நல நோக்கத்துடனேயே அது மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றும் அவர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் எடுத்துக் கூறியதை நிராகரித்துவிட்ட உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.பி. பஞ்சால் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, மன்னிப்பு வாக்குமூலம் தாக்கல் செய்து வழக்கை முடித்துக்கொள்ளுமாறு கூறி, அதற்கு 6 மாத கால அவகாசத்தையும் அளித்துள்ளது.
இதன்மூலம் தங்களுக்கு எதிரான குற்றச்சாற்றுகள் உண்மையே ஆனாலும், அதற்காக சட்டப்பூர்வமான விசாரணைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. "நாட்டிற்கு நாங்கள் நியாயம் சொல்லுகிறோம். எங்களுக்கு யாரும் நியாயம் கற்பிக்கக் கூடாது. நாங்கள் நியாய, நீதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள்" என்று முன்பெல்லாம் அரசர்கள் காலத்தில் கூறப்பட்டதாக வரலாற்றில் படித்ததையே இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.
கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கில்...
செய்தியாளர் விஜய் சேகர் செய்ததைப்போல, கேள்வி கேட்க பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காட்ட டெஹல்கா இணையத்தளம் ரகசிய கேமராவைப் பயன்படுத்தி, ஆதாரத்துடன் ஊழலை வெளிப்படுத்தி, அதன் காரணமாக குற்றம்சாற்றப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தபோது அதனை விசாரித்து, தீர்ப்பையும் வழங்கிய உச்ச நீதிமன்றம்தான், இப்பொழுது நீதித் துறைக்கு எதிராக அதே பொது நல நோக்கோடு நடத்தப்பட்ட புலனாய்வை தவறு என்று கூறி, உண்மையை வெளிக்கொணர்ந்தவரை மன்னிப்புக் கோர கேட்கிறதென்றால்... இது நீதியா? அநீதியா?
இந்திய அரசமைப்பு சட்டத்தில், ஜனநாயகத்தின் தூண்களாக அரசாங்கம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிக்கையை நான்காவது தூண் என்று குறிப்பிடாவிட்டாலும், மக்களின் கருத்துரிமையை வெளிப்படுத்தும் கருவியாக பத்திரிக்கைகள் இருப்பதாலும், ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் தங்களது பாதையில் சீராக பயணிக்கும் கண்காணிப்பாளனாக செயல்படுவதாலும் அதனை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருத்தப்படுகிறது.
அதனால்தான் பத்திரிக்கைச் சுதந்திரமே ஒரு நாட்டின் மக்களுக்குள்ள கருத்துச் சுதந்திரத்தின் அளவாகவும், வெளிப்பாடகவும் கருதப்படுகிறது. எங்கெல்லாம் பத்திரிக்கைச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறதோ, நசுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மக்களின் அடிப்படைச் சுதந்திரமான கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுவதாவும், நசுக்கப்படுவதாகவும் கொள்ளப்படுகிறது.
தனக்கு நிகரான அதிகாரம் பெற்ற நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாற்றின் உண்மையறிய, அது தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாற்று ஒரு நீதிமன்றத்தின் நடவடிக்கை தொடர்பானதாக இருக்கும்போது, அதனை வெளிப்படையாக விசாரித்து தன் மீதான கறையை நீக்க முற்பட்டிருக்க வேண்டுமே தவிர, அதை மூடி மறைக்கும் முகமாக, உண்மையை வெளிக்கொணர்ந்தவரையே மன்னிப்பு கேட்கக் கோருவது நியாயமற்றது. கருத்துச் சுதந்திரத்தின் ஆணி வேரை அழிப்பது போன்றது.
அரசு, நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவற்றிற்கு எதிராக ஒவ்வொரு நாளும் உத்தரவுகளைப் பிறப்பித்து நீதியை நிலைநாட்டும் நீதித் துறை, தனக்கு எதிராக குற்றச்சாற்று எழும்போதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு எனும் சட்ட வாளைக் காட்டி மிரட்டுவது உண்மையை எதிர்கொள்ள அஞ்சும் அதன் அச்ச உணர்வையும், நீதியை ஏற்க மறுக்கும் சகியாமையையுமே காட்டுகிறது.
இந்த நிலை நீடிப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.

No comments:
Post a Comment