பழி தீர்ப்பதற்காக கொடூரம் பெண் குழந்தைகளுக்கு திருமணம்
இஸ்லாமாபாத் :தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டதால், குடும்பப்பகை ஏற்பட்டது. இதற்கு பழி தீர்ப்பதற்காக, அவரது இரு பெண் குழந்தைகள், சித்தியின் சகோதரர்களுக்கு, திருமணம் செய்து வைக்கப்பட்ட கொடுமை பாகிஸ்தானில் அரங்கேறியது.
பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் நவாஸ். இவரது மனைவி அன்வர் பீவி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தனது மனைவியின், ஒன்று விட்ட சகோதரியை திடீரென்று திருமணம் செய்து கொண்டார் நவாஸ். இதனால், கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டது. கிராம வழக்கப்படி, இது போன்ற செயலில் ஈடுபடுவோரின், சிறிய குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். இதன் அடிப்படையில், நவாசின் ஒன்பது வயது மற்றும் ஏழு வயது பெண் குழந்தைகளுக்கு, சித்தியின் சகோதரர்கள் கலித் மற்றும் முகமது யாசின் ஆகியோருக்கு திருமணம் செய்து வைக்க, பஞ்சாயத்து கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. பஞ்சாயத்துக் கூட்டத்திலேயே, திருமணமும் செய்து வைக்கப்பட்டது.திருமணத்துக்குப் பின், பெண் குழந்தைகளை அழைத்துச் செல்ல மணமகன்கள் முயன்றனர். இதை, அன்வர் பீவியின் குடும்பத்தார் தடுத்து நிறுத்திவிட்டனர். இப்பிரச்னையை, இப்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment