Friday, April 4, 2008

அமெரிக்காவில் ரூ.10.40 கோடிக்கு விலை போன website டொமெய்ன் நேம்

ஏப்ரல் 05,2008,11:01

நியுயார்க் : ஒரு டொமெய்ன் பெயர் அமெரிக்காவில் 2.6 மில்லியன் டாலருக்கு ( 10 கோடியே 40 லட்சம் ரூபாய் ) விற்கப்பட்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ? பிஸ்ஸா.காம் என்று டொமெய்ன் பெயரை, மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நார்த் போடோமேக் என்ற இடத்தில் வசிக்கும் கிரிஸ் கிளார்க் ( வயது 43 ) என்பவர் 1994ம் ஆண்டு வாங்கி இருந்தார். அப்போது தான் வேர்ல்டு வைட் வெப் வழக்கத்திற்கு வர ஆரம்பித்திருந்தது. பிஸ்ஸா.காம் என்ற பெயரை வாங்கியதன் மூலம், பிஸ்ஸா கம்பெனிகளுடன் இவர் வைத்திருக்கும் கன்சல்டிங் கம்பெனிக்கு நல்ல தொடர்பு கிடைக்கும் என்று அவர் நம்பினார். தொடர்பு கிடைத்ததோ இல்லையோ, அவரது கன்செல்டிங் கம்பெனியை 2000ம் ஆண்டு மூடி விட்டார். ஆனால் பிஸ்ஸா.காம் டொமெய்ன் பெயரை மட்டும் விடவில்லை. வருடத்திற்கு வெறும் 20 டாலர் ( 800 ரூபாய் ) மட்டும் கட்டணமாக செலுத்தி அந்த டொமெய்னை உபயோகப்படுத்தி வந்தார். அதன் மூலம் விளம்பரங்களை வெளியிட்டு வந்தார். 2006ம் ஆண்டு, வோட்கா.காம் என்ற டொமெய்ன் பெயர் 3 மில்லியன் டாலருக்கு ( ரூ.12 கோடி ) விற்கப்பட்டிருக்கிறது என்பதை கேள்விப்பட்ட இவர், நம்மிடம் இருக்கும் பிஸ்ஸா.கார் டொமெய்ன் பெயருக்கும் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்று பார்த்தால் என்ன என்று நினைத்தார். எனவே இந்த ஜனவரியில், அவரிடம் இருக்கும் பிஸ்ஸா.காம் டொமெய்ன் பெயரையும் விற்க முன் வந்தார். மார்ச் 27 ம் தேதி ஆன்லைன் ஏலத்திற்கு வந்த இவரது பிஸ்ஸா.காம், முதலில் 100 டாலருக்கு கேட்கப்பட்டது. பின்னர் ஒரு வாரத்திலேயே 2.6 மில்லியன் டாலருக்கு உயர்ந்து விட்டது. 2.6 மில்லியன் டாலருக்கு பிஸ்ஸா.காம் டொமெய்ன் பெயரை விற்க ஒப்புக்கொண்ட கிளார்க், 1990 வாக்கிலேயே இன்னும் நிறைய டொமெய்ன் பெயரை வாங்கி வைக்காமல் போனோமே என்று வருத்தப்படுகிறார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails