Monday, April 7, 2008

சிறுமியை பலாத்காரம் செய்த போலி சாமியாருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த போலி சாமியாருக்கு 10 ஆண்டு சிறை

திருவண்ணாமலை: செய்யாறு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த போலி சாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செய்யாறு அடுத்த புதுப்பாளையம் நெமிலி பகுதியை சேர்ந்தவர் ராமு (40). இவர் தன்னை சாமியார் என்று சொல்லி கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்.

கடந்தாண்டு மார்ச் 10ம் தேதி இவர் அங்குள்ள திருநல்லூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி பிரேமா (சிறுமியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் பலாத்காரம் செய்தார்.

செய்யாறு மகளிர் போலீஸார் விசாரித்து, போலி சாமியார் ராமுவை கைது செய்தனர். இந்த வழக்கு செய்யாறு நீதிமன்றத்தில், நீதிபதி சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, போலி சாமியார் ராமுவுக்கு 10 ஆண்டு தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

http://www.dinamalar.com/2008MAR21/district/thiru.asp

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails