பிரான்ஸ் பிரஜைகளை கொல்வேன் என ஒசாமா பின்லேடன் எச்சரிக்கை
நிஹாப் மற்றும் பர்தா அணிவதற்குத் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை அமுல்படுத்தவுள்ளமை மற்றும் ஆப்கானிஸ்தான் போருக்கு ஆதரவு வழங்கிவருகின்றமை போன்ற நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் முகமாக பிரான்ஸ் பிரஜைகளைக் கொல்லப்போவதாக அல்ஹைதா தலைவர் ஒசாமா பின்லேடன் அச்சுறுத்தியுள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சி சேவையினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒலிநாடாவிலேயே இவ் அச்சுறுத்தலை விடுத்துள்ள பின்லேடன் ஆப்கானில் பெண்களையும் சிறுவர்களையும் கொலை செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பிரான்ஸ் உதவி வருகிறது. முஸ்லிம்கள் மீது பிரான்ஸ் பிரயோகிக்கும் அடக்குமுறைகளுக்கெதிராக கடந்த மாதம் ஆபிரிக்க நாடான நைஜரில் 5 பிரான்ஸ் பிரஜைகள் கடத்தப்பட்டனர். எமது நிலங்களை ஆக்கிரமித்து எமது சிறுவர்களையும் பெண்களையும் கொல்லும் நடவடிக்கையில் பங்கேற்றுள்ள உங்களின் செயலை எவ்வாறு நியாயப்படுத்துவது?
இதனை இலகுவாக சமப்படுத்துவதற்கான வழியாதெனில் நீங்கள் எமது மக்களைக் கொன்றால் நீங்களும் கொல்லப்படுவீர்கள். எமது மக்களைக் கைது செய்தால் நீங்களும் கைது செய்யப்படுவீர்கள் எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தால் உங்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படும். உங்களது பராதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையையும் எமது தேசத்தின் மீது நீங்கள் செலுத்தும் செல்வாக்கையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். அத்துடன் ஆப்கானிலிருந்து உங்களது படைகளை விலக்கிக் கொள்வது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்
source:athirvu
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment