Monday, October 25, 2010

சமூக வலைதளம் மூலம் சம்பாதிக்கும் சிறுவன்



பெங்களூரு : இணையதளங்களால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதாக புகார்கள் எழும் நிலையில், சமூக வலைதளம் வாயிலாக, 13 வயது சிறுவன் ஒரு தொகையை சம்பாதித்து வருகிறான். இணையதளங்களில், அண்மைக்காலமாக பாலியல் மற்றும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இணையதளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், ஆர்குட், பேஸ்புக் மற்றும் பிளாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிளாக்கில் எழுதுவதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். டீன்-ஏஜ் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர்.

பெங்களூரில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில், 9ம் வகுப்பு படித்து வரும் விஷால் என்ற மாணவன், பிளாக்கில் எழுதுவதன் மூலம் மாதந்தோறும் 3,680 ரூபாய் சம்பாதித்து வருகிறான். 

அவனது பிளாக்கில் எழுதுவதால், விளம்பரத்திற்கென்று உள்ள பகுதிகளில், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விளம்பரம் அளிக்கின்றனர். இதனால், அவனுக்கு விளம்பர வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, மற்றவர்களில் பிளாக்குகளை மேம்படுத்தி, விளம்பரம் செய்வதன் வாயிலாகவும், டிசைன் செய்து தருவதாலும் வருவாய் ஈட்டுகிறான். பிளாக் உட்பட இரண்டு இணையதளங்களையும் வைத்துள்ளான். அவற்றின் வாயிலாகவும் வருவாய் வருகிறது. இதுதவிர, இ-புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறான்.

இதுகுறித்து விஷால் கூறியதாவது: முதலில், வலைதளங்களில் எழுதுவதற்கு எனது வயது தடையாக இருந்தது. ஆனால், ஆறு மாதம் வரை மட்டுமே அந்த சிரமம் இருந்தது. தற்போது, வயதே எனக்கு சாதகமாகி விட்டது. தற்போது, 60 பக்கம் கொண்ட இ-புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன். அது முடியும் தறுவாயில் உள்ளது. எனது நண்பர்கள் பிளாக்கில் எழுதுவதற்கு உதவுவதோடு, அவர்களின் பிளாக்குகளை பிரபலப்படுத்தவும் உதவி செய்கிறேன். இவ்வாறு விஷால் கூறினான்


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails