"பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே':புது மொழி படைக்கும் ஊனமுற்றவர்
காரைக்குடி : பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் காரைக்குடியை சேர்ந்த செல்வராஜ் (69). மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இவர், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் படித்து, பி.ஏ., பொருளாதார பட்டம் பெற்றவர். போலியோ தாக்கி கால்கள் செயல் இழந்ததால், கைகளில் செருப்பை மாட்டி கொண்டு, தவழ்ந்து செல்கிறார். திருமணம் செய்து கொள்ளாத இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. உசிலம்பட்டியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி, நஷ்டமானதால், காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தார்.
யாசகம்: தற்போது இவரது தொழில் யாசகம் செய்வது. இது தவறு தான். ஆனால், "கற்கை நன்றே, கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற நன்னெறியை தழுவி, கடந்த நான்கு ஆண்டாக, ஏழை மாணவர்களுக்கு (இலவச) கல்விச்செல்வம் கொடுத்து வருகிறார். மாலையில் டியூசன் எடுப்பது, புத்தகம், நோட்டு வாங்கி கொடுப்பது என இவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
அவர் கூறுகையில், ""காலை, மாலையில் மூன்று மணி நேரம் பிச்சை எடுப்பேன். 300 ரூபாய் வாடகையில் குடிசை பகுதியில் வசிக்கிறேன். பிச்சை எடுப்பது வருத்தம் அளித்தாலும், மாணவர்களுக்கு உதவுவது திருப்தி தருகிறது. கல்விக்காக பிச்சை எடுப்பதை கவுரமாக கருதுகிறேன்,'' என்றார்
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment