வாஷிங்டன், அக். 21-
குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.
அதில் பெண்கள் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. புதிதாக கர்ப்பமான பெண்களின் மூளையை முதலில் ஸ்கேன் செய்து பார்த்தனர். அடுத்து அவர்கள் குழந்தை பெற்ற பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஸ்கேன் செய்து பார்த்தனர்.
இதில் பெண்கள் குழந்தை பெற்ற பிறகு அவர்களின் மூளை வளர்ச்சி அடைந்து புத்திசாலியாக மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும்போது உடலில் உள்ள ஹார்மோன் சுரத்தல் அதிகரிக்கிறது. இதன் மூலம் மூளையிலும வளர்ச்சி ஏற்படுவது தெரிந்தது
source:maalaimalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment