Thursday, October 28, 2010

இந்த வார டவுண்லோட் - ரகசியத்தைக் காப்பாற்ற


இணையம் வழி அனைத்து நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று நமக்குக் கிடைத்த வசதி சிறப்பான ஒன்று என்றாலும், அதில் உள்ள ஆபத்துக்களுக்கும் பஞ்சமில்லை. நாம் என்ன கீ போர்டில் அழுத்துகிறோம் என்று அறிந்து, அதனை அப்படியே மற்றவர்களுக்கு தெரிவிக்கும் ஸ்பைவேர்கள் ஆபத்து நாளொரு மேனியாக வளர்ந்து வருகிறது. இத்துடன் நம் கம்ப்யூட்டரில் நம்மை வேவு பார்க்கும் ஒரு புரோகிராம் கீ லாக்கர்களாகும். நாம் என்ன கீகளை அழுத்துகிறோம் என்பதனை அப்படியே ஒரு லாக் புக்காக அமைத்து, நம்மை வேவு பார்க்கும் நபர்களுக்கு பைலாக தெரிவிக்கும் கீ லாக்கர்கள் அதிகம் இயங்கி வருகின்றன.  இதிலிருந்து நம்மை பாதுகாக்க, நாம் அழுத்தும் கீகளை, கம்ப்யூட்டர்களில் உள்ள கீ லாக்கர்  புரோகிராம்கள் அறிந்து கொள்ள விடாமல் தடுக்க இணையத்தில் சில இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன.
இவற்றில் சிறந்ததாக  அண்மையில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் பெயர் KeyScrambler Personal. இதனைQFX Software  என்னும் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.  இது மிக அருமையாகச் செயல்படுகிறது. நாம் டைப் செய்கையில் கிடைக்கும் கீ ஸ்ட்ரோக்குகளைச் சுருக்கி மாற்றுகிறது. பின்னர், பிரவுசர்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று, அங்கு ஒரிஜினல் கீகளாக மாற்றித் தருகிறது. இதனால், கீ லாக்கர்கள்   எந்த கீகள் அழுத்தப்பட்டன  என அறிவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த கீ லாக்கர்களுக்கு, சுருக்கப்பட்ட என்கிரிப்டட் சிக்னல்கள் தான் கிடைக்கும். அதனை மற்றவர்கள் அறிய முடியாது. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிளாக் ஆகிய பிரவுசர்களுக்கான  KeyScrambler Personal   தொகுப்பு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. மற்ற பிரவுசர்கள் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களுக்கு வேண்டும் என்றால், கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மேலும் இது விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டுமே இயங்குகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி https://addons. mozilla.org/enUS/firefox/addon/3383/

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails