பிரித்தானியாவில் உள்ள எசிக்ஸ் நகராட்சிப் பொலிசார் திங்கட்கிழமை முதல் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைவதாக சொல்லப்படுகிறது. இணைந்து தற்கொலை செய்வது எப்படி என்று இணையத்தளத்தில் உள்ள தற்கொலைக்கான கருத்துக்களம் (Suicide Forum)) என்ற சட்டிங் (chat) ஊடாக பிரித்தானிய பிரஜைகள் இருவர் உரையாடியுள்ளனர். வார இறுதியில் ஒதுக்குப் புறமான தொழிற்சாலை ஒன்றிற்கு அருகாமையில் தமது காரை நிறுத்திவிட்டு, நச்சுத் திரவத்தையும், பதார்த்தங்களையும் உட்கொண்டு அவ்விருவரும் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர்.
திங்கட்கிழமை தொழிற்சாலைக்குச் சென்ற தொழிலாளி ஒருவர் இவர்கள் காரில் இறந்து கிடப்பதை அவதானித்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார். காரின் கண்ணாடிகளில், காருக்கு உள்ளே நச்சுத் திரவங்கள் இருப்பதாகவும், ஜாக்கிரதையாகக் கையாளவும் எனவும் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. கார் கதவுகளை திறந்தால் மூச்சுத் திணறல் ஏற்படலாம் எனவும் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து பொலிசார் அதிர்ந்து போனார்கள். அவர்கள் கடைசியாக உபயோகித்த கம்பியூட்டரில் இருந்து, தற்கொலைக்கு நான் தயார், அதற்காக நச்சுத் திரவங்களும் தயார் என்ற சட்டிங் வாசகங்கள் இருந்ததைப் பார்த்து குழம்பிய பொலிசார், தற்கொலை செய்வதற்கெல்லாம் கருத்துக்களம் இருக்கிறதா என அன்றுதான் தெரிந்துகொண்டனராம்.
இறந்த இருவரில் ஒருவருக்கு தீராத வியாதி இருப்பதாகச் சொல்லப்பட்டலும், அது சாவுக்கு காரணம் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், பொலிசார் மேலும் குழம்பியுள்ளனர். நோக்கமே இல்லாத சாவு என்று பெயரிட்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
--
No comments:
Post a Comment