புதுடெல்லி: இந்தியாவின் முக்கிய கம்ப்யூட்டர்கள் மற்றும் நெட்வொர்க்கை சீர்குலைக்கும் வகையில் ஸ்டக்ஸ்நெட் வைரஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பாதிப்புகள், நெட்வொர்க் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன என்று தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டக்ஸ்நெட் என்ற கம்ப்யூட்டர் வைரஸ் பல நாடுகளை மிரட்டி வருகிறது. பென் டிரைவ் மற்றும் நெட்வொர்க் மூலம் பரவும் இந்த வைரஸ், கம்ப்யூட்டர்களின் எஸ்சிஏடிஏ சிஸ்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி தொழிற்சாலைகளில் முக்கிய வேலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரான் அணுமின்நிலையத்தை ஸ்தம்பிக்க செய்வதற்காக, இந்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் மூலம் எதிரி நாடுகள் சமீபத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதனால் ஈரானில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் ஸ்டக்ஸ்நெட் வைரஸ் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதை முறியடிக்கும் பணியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கம்ப்யூட்டர் வைரஸ் மூலமான 'சைபர் போர்' தொடங்கிவிட்டது. இதை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் அறிக்கை விட்டது. இந்நிலையில், ஸ்டக்ஸ்நெட் வைரஸ் மூலம் இந்தியாவுக்கு, சீனா பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்திய அரசு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை வைரஸ் பாதிப்பில் இருந்து தடுப்பதற்காக, மத்திய தகவல் தொழில்நுட்ப துறையில் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி) என்ற தனிப்பிரிவு கடந்த 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஸ்டக்ஸ்நெட் வைரஸ் தாக்குதல் குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சகம், எரிசக்தி துறை அமைச்சகத்துக்கு, சி.இ.ஆர்.டி-யின் இயக்குனர் ஜெனரல் குல்சன் ராய் கடந்த ஜூலை 24-ம் தேதி கடிதம் அனுப்பி முன்னெச்சரிக்கை விடுத்தார்.
இதனால் இந்திய நிறுவனங்களில் உடனடியாக கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. இதனால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இன்சாட் பாதிப்பில்லை இஸ்ரோ தகவல்.
இந்திய செயற்கைகோள் இன்சாட்&4பி, ஸ்டக்ஸ்நெட் வைரஸால் கடந்த ஜூலை 7&ம் தேதி பாதிப்படைந்ததாகவும், இதனால் அதில் உள்ள 24 டிரான்ஸ்பாண்டர்களில், 12 செயல்படவில்லை எனவும் தகவல் வெளியானது. இதை மறுத்த இஸ்ரோ அதிகாரிகள், ''செயற்கைக்கோள்களில் உள்ள புரோகிராம் லாஜிக் கன்ட்ரோலர் (பிஎல்சி) மட்டும்தான் கம்ப்யூட்டர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும். இன்சாட்-4பி செயற்கைக்கோளில் பி.எல்.சி. இல்லை. அதற்கு பதிலாக உள்நாட்டில் தயாரான சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இன்சாட்-4பி செயற்கைகோளை ஸ்டக்ஸ்நெட் போன்ற வைரஸ் பாதிக்க வாய்ப்பில்லை என்றனர்.
No comments:
Post a Comment