விக்கிலீக் வெளியிடும் ஈராக் போர் ரகசிய ஆவணங்கள் : பென்டகன் அலறல்
டெஹ்ரான்: ஈராக்குடனான அமெரி்க்க போர் குறித்து 5 லட்சம் ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக் இணையதள பத்திரிகை தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்ட போர் குறித்த 70,000 ரகசிய ஆவணங்களை கடந்த ஜூலை மாதம் விக்கிலீக் எனும் இணையதளம் வெளியிட்டு பரபரப்பூட்டியது. மிகவும் ரகசியமான வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் எப்படி வெளியானது என்பது குறித்து இன்னமும் விடைகிடைக்காமல் பென்டகன் திணறி வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட போர் நடவடிக்கை குறித்து 5 லட்சம் ஆவணங்களை அடுத்த வாரம் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது . இதனால் பென்டகன் கலக்கமடைந்துள்ளது. ஈராக்கின் அமெரிக்க போர் நடந்த காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அபு காரியாப் சிறைச்சாலையில் போர் கைதிகளை சித்ரவதை செய்தது. நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் , அரசியல்வாதிகளை கைப்பாவையாக நடத்தியது , போரின் அப்பாவி மக்கள் பலியானதை குறைந்து எண்ணிக்கையினை அறிவித்தது என ஒவ்வொன்றாக நடந்த சம்பவங்களை விளக்கி ஆவணங்களை வெளியிட விக்கிலீக் முடிவு செய்துள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளன. இதனை முறியடிக்க பென்டகன் 120 பேர் கொண்ட குழுவினை அதிரடியாக நியமித்துள்ளது. ஆவணங்கள் வெளியிடவுள்ள இணையதளத்தினை தீவிரமாக கண்காணிக்க இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபர்ட்ஸ் கேட்ஸ் கூறுகையில், விக்கிலீக்கின் இந்த செயல் நாட்டின் பாதுகாப்பு நலனனுக்கு உகந்ததல்ல என்றார்.
source:dinamalar
--
http://thamilislam.tk
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment