Tuesday, October 5, 2010

இந்த வார டவுண்லோட் - புதுவகை ஸ்டிக்கி நோட்ஸ்


பொதுவாக ஸ்டிக்கி நோட்ஸ் வகையினை, கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் திரையில் தோன்றும்படி அமைக்கலாம். இதில் நாம் நினைவு படுத்தப்பட வேண்டிய விஷயங்களை சுருக்கமாக எழுதி வைக்கலாம். செல்ல வேண்டிய முக்கிய நிகழ்ச்சிகள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், அனுப்ப வேண்டிய கடிதங்கள், பணம் செலுத்த வேண்டிய பில்கள் என அனைத்து வகை நினைவூட்டல்களையும் எழுதி, மானிட்டர் திரையில் ஒட்ட வைக்கலாம். தேவையில்லாதபோது நீக்கிவிடலாம்.
அண்மையில் புதுவிதமான ஸ்டிக்கி நோட்ஸ் ஒன்று கிடைக்கப்பெற்றது. இதன் பெயர் கம் நோட்ஸ் (Gumnotes)இதில் என்ன புதுமை என்றால், இந்த நோட்ஸை, டெஸ்க்டாப் மட்டுமின்றி,  எந்த புரோகிராமிலும் ஒட்டி வைக்கலாம். புரோகிராம்களுடன், குறிப்பிட்ட ஆவணங்கள் கொண்ட கோப்புகளிலும் ஒட்டி வைக்கலாம். இதனால், குறிப்பிட்ட ஆவணத்தில் ஒன்றை எடிட் செய்வது சம்பந்தமான குறிப்புகளை எழுதி நோட்ஸாக ஒட்டி வைக்கலாம். 
ஒரு குறிப்பிட்ட ஆவணத்தை, குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், அதனைக் குறித்து வைக்கலாம். 
இதற்கு கம் நோட்ஸ் அப்ளிகேஷனை, சிஸ்டம் ட்ரேயில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமினை (வேர்ட்,எக்ஸெல், அடோப் பேஜ்மேக்கர், பெயிண்ட் போன்ற) இயக்குகையில் அதில் நினைவூட்டல்கள் அடங்கிய நோட்ஸினை அமைக்க வேண்டும் என்றால், உடனே சிஸ்டம் ட்ரேயிலிருந்து, அதனை இயக்கி, நோட்ஸ் அமைக்கலாம்.  அடுத்த முறை, அந்த புரோகிராம் அல்லது பைலை இயக்கும்போது, இந்த நோட்ஸ் பாப் அப் முறையில் எழுந்து வந்து நினைவூட்டும்.  இதனை குறிப்பிட்ட இணைய தளத்துடனும் இணைக்கலாம். குறிப்பிட்ட இணைய தளத்தினைப் பார்க்கையில் நோட்ஸ் தயாரித்து ஒட்டிவிட்டால், மீண்டும் அடுத்த முறை எத்தனை நாட்கள் கழித்து அந்த இணைய தளம் சென்றாலும், அந்த நோட்ஸ் பாப் ஆகி உங்களுக்கு நினைவூட்டும். அதே போல, இமெயில் புரோகிராம்களிலும்  நோட்ஸ் ஒட்டிக் கொள்ளலாம். இந்த கம் நோட்ஸ் புரோகிராமினை இலவசமாக இணையத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இந்த தள முகவரி: http://www.gumnotes.com/

 


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails