கர்நாடகாவில் ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக எடியூரப்பா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக பெருந்தொகை பேரம் பேசப்படுகிறது. பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடா, ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாசை இழுக்க பேரம் பேசினார்.
அவர்கள் பேசிய டெலிபோன் பேச்சு, வீடியோ ஆதாரத்தை குமாரசாமி வெளியிட்டார். அதில் இருந்த உரையாடல்கள் வருமாறு:-
சுரேஷ் கவுடா (பா.ஜனதா):- அணி மாற உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?
ஸ்ரீனிவாஸ் (ஜனதா தளம்):- எனக்கு ரூ.100 கோடி வேண்டும் உங்களால் தரமுடியுமா?
சுரேஷ் கவுடா (சிரித்து கொண்டே):- நான் அசோக்கிடம் (உள்துறை மந்திரி) பேசட்டுமா. ரூ.15 கோடி வரை தரலாம்.
ஸ்ரீனிவாஸ்:- ரூ.15 கோடி மட்டும்தானா?
சுரேஷ்கவுடா:- நீங்கள் அசோக்கிடம் பேசுவது நல்லது. வாருங்கள் அவரை சந்தித்து பேசுங்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
ஸ்ரீனிவாஸ்:- எனக்கு கொடுக்கும் பணம் முடிவானால் நான் எனது ராஜினாமா கடிதத்தை உடனே தருகிறேன்.
சுரேஷ் கவுடா:- நீங்கள் அசோக்கிடம் பேசுங்கள் அவர் முடிவு செய்வார். பேரம் முடிவானால் நீங்கள் 2 காருடன் வாருங்கள் ஒரு காரில் பணத்தை நிரப்புகிறோம். வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.
ஸ்ரீனிவாஸ்:- இல்லை. பணம் முடிவாகும்வரை என்னால் எங்குமே வரமுடியாது. அஸ்வதா (ராஜினாமா செய்த ஜனதா தளம் எம்.எல்.ஏ) என்னிடம் போனில் பேசினார். அவருக்கு ரூ.25 கோடி பேசிவிட்டு ரூ.5 கோடி மட்டுமே கொடுத்து இருக்கிறீர்கள். எனவே நீங்கள் உரிய பணத்தை எனக்கு கொடுத்தால் உங்களுடன் வர தயாராக இருக்கிறேன்.
சுரேஷ்கவுடா:- ரூ.15 கோடி என்று பேசி முடிக்கவா? அசோக் இதை தர தயாராக இருக்கிறார்.
ஸ்ரீனிவாஸ்:- இல்லை, இல்லை, எனக்கு குறைந்தது ரூ.25 கோடி வேண்டும்.
இவ்வாறு அந்த உரை யாடல் செல்கிறது.
இந்த ஆதாரத்தை வெளியிட்ட குமாரசாமி சில எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 கோடி வரை தர மேலும் பேசப்படுவதாக தெரிவித்தார்.
ஆனால் இந்த வீடியோ ஆதாரம் உண்மை இல்லை என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது
source:maalaimalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment