இந்தியாவில் ஆஸ்திரேலியர் வெறியாட்டம்; கிரிக்கெட் தோல்வியால் அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டனர்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், வீரர்களுக்கான கிராமத்தில் தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றினர். காமன்வெல்த் போட்டிகளில் அதிகப் பட்ச பதக்கங்களைக் குவித்திருந்தபோதும், கிரிக்கெட்டில் கிடைத்த தோல்வியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
விளையாட்டு கிராமத்தில் இருந்த மின்சார சாதனங்களையும் மேஜை நாற்காலிகளையும் அவர்கள் போட்டு உடைத்தனர். இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்த சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தனர். அவர்கள் தங்கி இருந்த 8வது மாடியிலிருந்து ஒரு வாஷிங் மிஷினைத் தூக்கி எறிந்தனர்.
செவ்வாய் கிழமையன்று சச்சின் இரட்டை சதம் அடித்ததும், ஆஸ்திரேலியர்களின் வெறியாட்டம் தொடங்கியது. அங்கு இருந்த இந்திய ஊழியர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். டில்லி போலீசாருக்கு இது குறித்து புகார் தரப்பட்டும், இந்த சம்பவங்கள் ஆஸ்திரேலியாவுடன் அரசு ரீதியாக மோதலை ஏற்படுத்தும் என்று கருதி, அந்த புகாருக்கு முக்கியத்துவம் தரவில்லை. இது குறித்து போலீசார் கூறுகையில், விளையாட்டு கிராமத்துக்குப் பொறுப்பான குழுவினரிடமிருந்து புகார் வராததால் வழக்கு பதிவு செய்வில்லை என்றனர். இந்த சம்பவம் குறித்து விளையாட்டு ஏற்பாட்டுக்குழுவினர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய விளையாட்டுக்குழுத் தலைவருடன் விவாதித்த பின்னர், புகார் தருவதில்லை என முடிவு செய்தோம் என்றனர். விளையாட்டு வீரர்கள் இந்த செயலுக்காக மன்னிப்பு தெரிவித்தனரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர்கள் கருத்து கூற மறுத்து விட்டனர்
No comments:
Post a Comment