வாரணாசி : மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக முஸ்லிம் இளம்பெண் ஒருவர், இந்து காவியங்களை உருது மொழியில் மொழி பெயர்த்து வருகிறார்.உத்திரப்பிரதேசம் லல்லாபூரா பகுதியில் வசிக்கும் முகமது சித்திக்கின் மகள் நஸ்நீன். பட்டதாரி பெண்ணான இவர், உள்ளூர் தன்னார்வ அமைப்பு ஒன்றுடன் இணைந்து முதியவர்கள், பெண்கள் மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இவரது தந்தை நெசவு தொழிலாளி. சகோதரன் முகமது சாதிக்கும், தந்தைக்கு உதவியாக எம்ப்ராய்டரி ஓவியங்களை வரைந்து தருகிறார்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பு எப்படி வருமோ என, நாடே உச்சக்கட்ட பதட்டத்தில் இருந்த நேரத்தில், நஸ்நீன் அமைதியாக வேறொரு பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது, இந்து கடவுள் ராமர் மற்றும் அவரைப் பற்றிய காவியங்களை உருது மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்.ஏற்கனவே, துளசி தாசர் எழுதிய ராமபக்தன் அனுமன் பற்றிய காவியத்தையும், பெண் கடவுள் துர்கையின் காவியத்தையும் உருவில் மொழி பெயர்த்திருக்கிறார்.
இதுகுறித்து நஸ்நீன் கூறியதாவது:ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் உதாரண புருஷராக திகழ்ந்தார். அவரைப் பற்றிய காவியத்தை உருதுவில் மொழி பெயர்த்து வருகிறேன். இந்த பணி ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும்.எனக்கு மொகலாய காலத்து எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். மொகலாய பேரரசர் அக்பர் காலத்தில், அப்துல் காதர் படாயூன்னி என்பவர், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் அரபி மொழியிலும், பாரசீக மொழியிலும் மொழி பெயர்த்துள்ளார். அவர்தான் எனக்கு ரோல் மாடல்.இவ்வாறு நஸ்நீன் கூறினார்.
http://thamilislam.tk
No comments:
Post a Comment