வீட்டு பாத்ரூமில் குளிக்கும்போது நிர்வாணப் படம் எடுத்து வைத்திருப்பதாக லாரி டிரைவர் மிரட்டியதால், வனக்கல்லூரி பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்குத் தூண்டியதாக லாரி டிரைவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சீரநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கருமலை செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால்(42); லாரி அதிபர். இவரது மனைவி கவிதா(35); இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான வீட்டில், கேரளாவைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார்(33) என்பவர் தனது மனைவி பார்வதியுடன் வசித்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன் வேணுகோபால் மற்றும் சிவக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து புதிதாக லாரி வாங்கினர். வரவு - செலவு கணக்கில் பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
வீட்டைக் காலி செய்த சிவக்குமார், அதே ஊரில் வேறு வீட்டில் குடியேறினார். அதன்பின், தனது கணவர் வேணுகோபாலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்த கவிதா, தனியாக வசித்து வந்தார். குடும்பத்தை நடத்த வழியின்றி, கோவை வனக்கல்லூரிக்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவக்குமார், கவிதாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி காலை வேலைக்குச் சென்ற கவிதா காலை 11.00 மணிக்கே வீடு திரும்பினார்.
காரணம் குறித்து அவரது தாயார் கேள்வி எழுப்பிய போது, "உடல்நிலை சரியில்லை' என கூறியுள்ளார். மறுநாள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த கவிதா, சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பிரேதத்தை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய ஆர்.எஸ்.,புரம் போலீசார், பரிசோதனை முடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கவிதாவின் உடலை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பிய உறவினர்கள், சமையலறை "பிரிட்ஜ்'ஜில் ஒரு கடிதமும், மொபைல்போனும் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டெடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடிதத்தில், கவிதா கூறியிருப்பதாவது: எங்களது வீட்டுக்கு சிவக்குமார் குடிவந்த போதே, "அவன் நல்லவன் அல்ல; செயல், பேச்சு சரியில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் குடிவந்துள்ளான்' என, கணவரிடம் தெரிவித்தேன். அப்படியிருந்தும், அவன் எங்களது வீட்டுக்கு குடிவந்து விட்டான். நான் கணவரை பிரிந்த பின், நிறைய தொந்தரவுகளை கொடுத்தான். நான் பாத்ரூமில் குளிக்கும் போது மொபைல்போனில் நிர்வாணப் படம் எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, பல்வேறு இடங்களுக்கு அழைத்தான். மறுத்த போது, "உனது நிர்வாணப் படத்தை வெளியிட்டு விடுவேன்' என, மிரட்டினான். அவனது தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு சிவக்குமாரும், அவனது மனைவி பார்வதியுமே காரணம். என்னை செத்துப் போகுமாறு, அவனது மனைவி அடிக்கடி மிரட்டினாள். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, கவிதாவை தற்கொலைக்குத் தூண்டியதாக, லாரி டிரைவர் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி பார்வதியை கைது செய்தார். இவர்களிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment