கனடாவில் சூடுபிடிக்கிறது பர்தா விவகாரம் - இன்று கனடா நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்புக்கு பலத்த எதிர்பார்ப்பு
கடந்த சில மாதங்களாகவே முஸ்லிம் பெண்கள் கண்களை மட்டும் வெளிக்காட்டும் மத பாரம்பரிய ஆடையான பர்தாவை அணிவதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முனனர் பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் பர்தா அணிவது கூடாது என்பது சட்டமாக்கப்பட்டது. சட்டத்தை மீறி பொது இடங்களில் பர்தா அணிந்தால் $200 அபராதம் கட்ட வேண்டும். மேலும் பெண்களை பர்தா அணியச் சொல்லி வற்புறுத்துபவர்களுக்கும் 1 வருட சிறை தண்டனை என்ற சட்டம் அமலாகியுள்ளது.
இதனால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு பிரான்ஸ் உள்ளாகி வருவதாக உளவுத்துறை அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனிலும் பர்தா விவகாரம் சில மாதங்களாக சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
பிரிட்டனில் உள்ள முஸ்லிம் பெண்களில் 70 விழுக்காட்டிர் பர்தா அணிவதை விரும்பவில்லை என்ற ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இஸ்லாமிய சமய அமைப்புக்கள சில கடுமையான கண்டனங்களை தெரிவித்ததால் அரசு பர்தாவிற்கு தடை இல்லை என அறிவித்தது.
இருப்பினும் பிரிட்டனில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகத்திற்குள் முகத்தை மூடும் படியான எந்த ஆடையையும் அணியக் கூடாது என உத்திரவிட்டுள்ளன.
கடந்த வாரம் பிரிட்டன் நீதிமன்றத்தில் பர்தா அணிந்து கொண்டு சாட்சியமளிக்க வந்த பெண்ணிடம் நீதிபதிகள் பர்தா அணிந்துகொண்டு சாட்சியம் கூறினால் முக பாவணைகளை பார்க்க முடியாது எனவே அவற்றை நீக்கி விட்டு சாட்சியமளித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என கண்டிப்புடன் கூறினர்.
கனடாவிலும் 32 வயது பெண்ணொருவர் தன் உறவினர்களால் கற்பழிக்கப்பட்டதாக பர்தா அணிந்து கொண்டு சாட்சியம் கூறியுள்ளார். ஆண்ட்டரியோ நீதிமன்றம் இந்த வழக்கு குறித்த விசாரணையை நடத்திய போது அந்த பெண்ணை பர்தாவை நீக்கி விட்டு சாட்சியமளிக்க கூறியுள்ளனர்.
தொடர்ந்து ஒவ்வொரு வழக்கிலும் இது போன்று கூறிக் கொண்டிருக்கக் முடியாது எனபதால் இதை முறைப்படுத்தும் ஆணையை ஆண்ட்டரியோ நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. தீர்ப்பை அறிய அனைத்து தரப்பு மக்களும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்
source:tamilcnn
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment