Tuesday, October 5, 2010

வீராங்கனைகளிடம் ரகசியத்தை கேட்ட இளவரசர் சார்லஸ்

 


புதுடில்லி : இந்திய பளு தூக்குதல் வீராங்கனைகளைப் பார்த்து, "வெற்றியின் ரகசியம் என்ன' என, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆச்சரியத்துடன் கேட்டு மகிழ்ந்தார்.

டில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவியுடன் வந்து துவக்கி வைத்தார்.அப்போது விளையாட்டுகிராமத்துக்கு சென்று, அங்குதங்கியுள்ள வீரர்களை சந்தித்தார்.இங்கிலாந்து பளு தூக்குதல் வீராங்கனைகளின் பயிற்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்த சார்லஸ், திடீரென இந்திய வீராங்கனைகள் பயிற்சி செய்யும் இடத்துக்கு வந்தார். அங்கிருந்த 58 கி.கி., "நடப்புசாம்பியன்'  ரேணுபாலா தேவி,சந்தியா ராணி, மோனிகா தேவி ஆகியோரை சந்தித்த அவர்,"உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?' எனக் கேட்டு வியந்துள்ளார்.


இதுகுறித்துபளு தூக்குதல் அணியின் மானேஜர் சீனிவாஸ் ராவ் கூறியது:இங்கிலாந்து பளு தூக்குதல் வீராங்கனைகளுடன் சார்லஸ் பேசிக் கொண்டு இருந்தார். இதை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த போது, திடீரென ஆச்சரியப்படும் விதமாக, அவர் எங்களை நோக்கி வந்தார். பின் எங்களுக்கு கைகொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.அருகில் இருந்த ரேணுபாலா தேவியை பார்த்து,"" பொதுவாகஇந்திய அணியினர் பளு தூக்குதலில் அதிக பதக்கங்களை வெல்கின்றனர். இந்த வெற்றியின் ரகசியம் என்ன,'' என்றார். நமது வீராங்கனைகள் பளு தூக்குவதை பார்த்து, இளவரசரின் மனைவி கமீலா பார்க்கரும்,ஆச்சரியப்பட்டார். சுமார் 20 நிமிடம்அங்கிருந்த சார்லஸ், பின் வீரர்களுக்கான வசதிகள் குறித்து மகிழ்ச்சிதெரிவித்தார். இவ்வாறு சீனிவாஸ் ராவ் தெரிவித்தார். 



source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails