புதுடில்லி:வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பதற்கு, கட்டாயம் லைசென்ஸ் தேவை உட்பட, புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விரைவில் கொண்டு வருகிறது.வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பது ஒரு கலையாகவும், ஆடம்பரமாகவும் கருதப்படுகிறது. பலர், பாதுகாப்பு காரணங்களுக்காக வளர்க்கின்றனர். சிலர் குடும்ப உறுப்பினர்களை விட, செல்ல பிராணிகள் மீது, அளவு கடந்த நேசம் கொண்டு வளர்க்கின்றனர்.
பல வீடுகளிலும், விற்பனை நிலையங்களிலும் செல்ல பிராணிகள் போதிய பராமரிப்பு இல்லாமல், பார்க்கவே பரிதாப நிலையில் இருக்கும். பராமரிப்பு இல்லாத செல்ல பிராணிகள், நோய்வாய்ப்பட்டு, அவற்றிடமிருந்து, மனிதர்களுக்கும் தொற்று பரவும் ஆபத்தும் ஏற்படுகிறது.
விற்பனை நிலையங்களில் செல்ல பிராணிகள், சிறிய கூண்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்படுவதாகவும், புகார்கள் எழுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு, செல்ல பிராணிகள் வளர்ப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பல புதிய கட்டுப்பாடுகளை விரைவில் அமல்படுத்த, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய் துள்ளது.
செல்ல பிராணிகள் வீடுகளில் வளர்க்கவும், விற்பனை செய்யவும் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும். லைசென்ஸ் 12 மாதங்கள் மட்டுமே செல்லத்தக்க வகையில் கொடுக்கப்படும். செல்ல பிராணிகள் வளர்ப்பதற்கு ஏற்றதா என, கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து சான்று பெற்றபின், லைசென்ஸ் வழங்கப்படும். விற்பனை நிலையங்கள் மூலமாகவோ அல்லது மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களிலும் லைசன்ஸ் பெற்று கொள்ளலாம்.வீடுகளிலும், விற்பனை நிலையங்களிலும் வளர்க்கப்படும் பிராணிகளை சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் அடிக்கடி சோதனை நடத்துவர்.
பிராணிகள் போதிய பராமரிப்பின்றி இருந்தாலோ, நோய் பாதிப்பு அறிகுறி இருந்தாலோ, பிராணிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.இதேபோன்று விற்பனை நிலையங்கள், பிராணிகளுக்கு போதிய இடவசதியும், சீதோஷ்ண நிலையும் கொண்டதாக இருக்க வேண்டும்.விற்பனை நிலையங்கள் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். பெரிய ரக நாய்களுக்கு, 24 சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் ஒதுக்க வேண்டும்.
அனைத்து பிராணிகளுக்கும் தினமும் உணவு அளிக்க வேண்டும். செல்ல பிராணிகள் விற்பனை கடைகள், இறைச்சி கடைக்கு அருகிலிருக்க கூடாது. விற்பனை நிலையங்கள், டாக்டர் ஒருவரை நியமிக்க வேண்டும் போன்ற கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது.புதிய கட்டுப்பாடுகளை, மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளும், இந்திய விலங்குகள் நலவாரியமும் இணைந்து கண்காணிக்கும்.புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிக்கு, பிராணிகள் நலஆர்வலர்களும், அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment