அந்தக் கற்களை அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹவாய் தீவில் ராட்சத டெலஸ்கோப்பை அமைத்து அதன் மூலம் இந்த கற்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, அந்தக் கற்களில் தண்ணீர் இருப்பது தெரிய வந்தது. உறைந்த நிலையில் அவற்றின் மேல் பகுதிகளில் தண்ணீர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
தண்ணீர் இருப்பதால் அவற்றில் உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதுபற்றியும் தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். நிலவில் தண்ணீர் இருப்பதை இந்தியாவின் சந்திராயன் ஓடம் கண்டுபிடித்தது.
அதே போன்று சூரியனைச் சுற்றி வரும் பல்வேறு கோள்களிலும் தண்ணீர் இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருந்தனர். அதன் போதே விண்கற்களில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. .
source:dinakaran
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment