Monday, May 24, 2010

உலகின் முதல் விளம்பரம்!

 
 

ப்போது, எப்படி ஆரம்பித்தன விளம்பரங்கள்?

'மனிதன் தனக்குத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்தபோது விளம் பரம் தேவைப்படவில்லை. தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்துதபோதுதான் விளம்பரம் பிறந்தது' என்கின்றனர் ஆய்வாளர்கள். முதன்முதலில் பாபிரஸ் இலைகள் மூலம் சுவரில் எழுதி விற்ப னையை மக்களிடம் விளம்பரப்படுத் தியவர்கள் எகிப்தியர் கள். பின்னர், வீடுகளுக்கு முன்சென்று கூவுவது, முச்சந்தியில் நின்று கத்துவது என்று விளம்பரம் படிப்படியாக வளர்ந்தது.

அப்போது படித்தவர் களின் எண்ணிக்கை சொற்பமாக இருந்ததால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஓவிய மாக வரைந்து விளம் பரங்கள் செய்தார்கள். அச்சு இயந்திரங்கள் தோன்றியபோது, விளம்பரங்கள் வேறு வடிவம் பெற்றன. 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் பத்திரிகைகளில் முதல் முறையாக மருந்து, மாத்திரைகள் பற்றிய விளம்பரங்கள் இடம்பிடித்தன.

ஜூன் 1836-ல் பிரெஞ்சுப் பத்திரிகையான La Presse முதன் முதலாக விளம்பரங்களுக்குக் கட்டணம் வசூலித்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள்தான் முடிவு எடுத்தார்கள். எனவே, பெண்களைக் குறி வைத்தே வீட்டு உபயோகப் பொருட்களை விளம்பரம் செய்தார்கள். 'அதையும் பெண் களைவைத்தே விளம்பரம் செய்யலாமே?' என்று நினைத்தபோதுதான் 'விளம்பர மாடல்கள்' என்றொரு புதிய இனம் உருவானது. ஒரு குளியல் சோப் விளம்பரம்தான் பெண் மாடலைவைத்து எடுக்கப்பட்ட முதல் விளம்பரம். 'நீங்கள் தொட விரும்பும் சருமம்'(The skin you love to touch) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன்.

1920-களில் ரேடியோ புழக்கத்துக்கு வந்தவுடன் விளம்பர உலகம் விரிவு அடைந்தது. 1950-களில் டுமான்ட் டெலி விஷன் நெட்வொர்க் என்ற தொலைக் காட்சி நிலையம் முதல் முறையாக விளம் பரங்களை ஒளிபரப்பியது. 1960-களில் என்ன செய்தியோ, அதை மட்டுமே விளம்பரம் என்று சொல்லி வந்தனர். அதற்கடுத்துதான் 'கிரியேட்டிவிட்டி' முக்கிய அம்சம் ஆனது.

இன்று எல்லாமே விளம்பரமயம். தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள் மட்டுமே விலைபோகிறார்கள். இல்லை என்றால், செல்லாக் காசுதான்!


source:vikatan



--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails