. |
எங்கும், எதிலும், எப்போதும் தாங்கள்தான் முந்தி இருக்க வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்கர்கள், செல்போன்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? உலக அளவில் செல்போன்களைப் பயன்படுத்துவதிலும் அமெரிக்கர்கள்தான் நம்பர் ஒன்! சராசரியாக, ஒரு அமெரிக்கர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட செல்போன்களைப் பயன்படுத்துகிறாராம். பரம ஏழையாக இருந்தாலும் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஒரு செல்போனை உபயோகிப்பது இல்லையாம் அமெரிக்கர்கள். 2.3% பேர் மட்டுமே தங்களுடைய பழைய செல்போனை மறுசுழற்சி செய்ய உபயோகப்படுத்துவதாகவும் மீதி 7% பேர் அதைக் குப்பையில் வீசுவதாகவும் சமீபத்திய சர்வே சொல்கிறது. நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் செல்போனில் உள்ள கேட்மியம், லெட், பெரிலியம் போன்ற தனிமங்களால் நோய் எதிர்ப்புச் சக்தி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையீரல் போன்றவை எளிதாகப் பாதிக்கப்படும். இதனால், அடிக்கடி செல்போன்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் அமெரிக்காவில். நடப்பு நிலவரப்படி சுமார் 250 ஆயிரம் டன் எடை மதிக்கத்தக்க 500 மில்லியன் செல்போன்கள் குப்பைத் தொட்டிகளுக்குக் காத்திருக்கின்றன. இந்த வருடம் மட்டும், புதிதாக ஐந்து மில்லியன் செல்போன்கள் அங்கு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவிகித உலக மக்கள் தொகைக்குச் சமம் என்று International Telecommunication Union சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
நிற்க... 1973-ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். 'மேரி கிறிஸ்துமஸ்' என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி. அனுப்பியவர் நீல்டேப்வொர்த் (டிசம்பர் 1992). இன்று அமெரிக்காவில் மட்டுமே நாளன்றுக்கு 4.1 மில்லியன் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். யு.எஸ் முழுக்க எஸ்.எம்.எஸ்தான்போல!--
source:vikatan
http://thamilislam.tk
No comments:
Post a Comment