திருவள்ளூர் : தனியார் தொலைக் காட்சியில் 24 மணி நேரம் தொடர்ந்து 507 நேயர்களிடம் உரையாடி, 19 வயது இளைஞர் லிம்கா சாதனை படைத்துள்ளார்.திருவள்ளூர் அடுத்த திருமுல்லைவாயல் வைஷ் ணவி நகரைச் சேர்ந்தவர் ராஜா மகன் விவேக்(19). இவர், கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் (ஜாக்) நிகழ்ச்சி தொகுப் பாளராகவும் மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
இவர் லிம்கா சாதனை மற்றும் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் காமெடி டைம், தெய்வீக நேரம், வாழ்த்தலாம் வாங்க, சிறுவர் நேரம், நேருக்கு நேர் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை (24 மணி நேரம்) நேரலை நிகழ்ச்சி திருவள்ளூரில் நடந்தது.இவர் உலக வரலாற்றிலேயே முதன் முதலாக இச்சாதனையை படைத் துள்ளார்.
லிம்கா உலக சாதனை புத்தகம் சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தாஸ், அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரன், பொது மருத்துவர்கள் ஜெயக்குமார், ராமநாதன், ஆசிரியர் ராஜிவ்குமார், ஆசிரியை சீதா உள் ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்காணித்து மதிப்பீடு செய்தனர்.நிகழ்ச்சியின் இடையே சாதனை இளைஞர் விவேக் கின் உடல்நிலை குறித்து அடிக்கடி டாக்டர்கள் பரிசோதித்தனர்.இந்நிகழ்ச்சியில் இளைஞர் விவேக்கை 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர் உள்ளிட்ட 75 பகுதிகளில் இருந்து 507 நேயர்கள் தொடர்பு கொண்டு பேசி னர்.
சாதனை குறித்து விவேக் கூறியதாவது:'நான் முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய புத்தகங் களை விரும்பி படிப் பேன்.இளைஞர்கள் சாதனை புரிய வேண்டும் என்ற அப்துல் கலாம் கருத்து தான், என்னை இச்சாதனைக்கு தூண்டியது.நானும் சாதனை படைக்க வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டு, தனியார் தொலைக் காட்சியில் (ஜாக்) பங்கேற்று இச்சாதனையை புரிந்துள்ளேன்.இச்சாதனை புரிய என் தாய் விஜயா எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் நிகழ்த்திய இச்சாதனையை நானே முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம் பெறுவேன்' என்றார்.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment