சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று நடாத்தப்படவேண்டும் எனக் கோரி அனைத்துலக பிணக்குகளுக்கான குழு [The International Crisis Group - ICG] ஓர் அறிக்கையினை வெளியிடவுள்ளது.
சிறிலங்காவினது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடமிருந்து இவர்கள் தகவல்களைக் கோருகிறார்கள். ஆனால் அனைத்துலக பிணக்குகளுக்கான குழு [The International Crisis Group - ICG] முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் எவையும் பொன்சேகாவுடன் தொடர்புபட்டிருக்கவில்லை.
இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இருப்பினும் சிறிலங்காவின் தற்போதைய இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக குறித்த சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் முன்னெடுக்கப்பட்ட வேளையில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எவையும் முன்வைக்கப்படாத அதேநேரம் அப்போது வன்னிப் பிராந்தியத் தளபதியாகச் செயற்பட்ட தற்போதைய இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய மீது குற்றம் சுமத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பில் தாம் விளங்கிக்கொள்வதாக நீதித்துறையினைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
தற்போதைய இராணுவத் தளபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சரத் பொன்சோவினது வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம் என நீதித் துறையினைச் சார்ந்தவர்கள் நம்புகிறார்கள்.
தேவையான தகல்களைத் தங்களுக்கு வழங்குவதில் பொன்சேகா உதவுவார் என்ற நம்பிக்கையில் பொன்சேகா தளபதியாக இருந்தபோது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ICG தற்போதைய இராணுவத் தளபதியின் மீது குற்றம் சுமத்துக்கிறது என கொழும்பினைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் கூறுகிறார்.
ICG யினது இணைத் தலைவராக கிறிஸ் பற்றன் பிரபு [Lord Chris Patton] இருக்கிறார். மே 5ம் நாள் வெளிவந்த பதிப்பில், சிறிலங்காவில் போர் இடம்பெற்ற வேளையில் பொதுமக்களைக் காக்கவேண்டும் என ஐ.நா விரும்பியிருந்தால் அது நேரடித் தலையீட்டினை மேற்கொண்டிருக்க வேண்டும் என ஐலண்ட் பத்திரிகை கூறுகிறது.
பிரதான நிறைவேற்று அலுவலராக லுயிஸ் ஆபர் இருக்கும் அதேநேரம் ICG தலைவராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் அமைச்சர் கிறேற் இவான் கடைமையாற்றுக்கிறார்.
மேற்குறித்த மூவரும் சிறிலங்கா தொடர்பாக அடிக்கடி வெளியிட்டு வரும் அவதானிப்புக்கள் விரோதப் போக்குடன் இருப்பதானது ICG இனது அறிக்கை தொடர்பான நம்பகத்தன்மையினை கேள்விக்குறியாக்குவதோடு இதன் உள்நோக்கம் தொடர்பான சந்தேககங்களை எழுப்புவதாகவும் அமைகிறது.
'அரசாங்கத்தின் மூத்த அலுவலர்களும் அதனது முக்கிய இராணுவ அலுவலர்களும்தான் இந்தப் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பு என நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக' ICG கூறுகிறது.
மருத்துவனைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது, ஐ.நா அமைப்பின் நிவாரணப் பொருள் விநியோக முயற்சிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டமை, பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியமை மற்றும் போரற்ற பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை போன்ற பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
சிறிலங்காவில் போர் முன்னெடுக்கப்பட்ட முறைமை தொடர்பிலும் பொதுமக்கள் தண்டிக்கப்படுவது தொடர்பிலும் விரோதப் போக்குடன் கூடிய அவதானிப்புக்களையே ICG யினைச் சார்ந்தவர்கள் வெளியிட்டிருப்பது அவற்றின் நம்பகத்தன்மையினைக் கேள்விக்குறியாக்குகிறது என என்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக அது வெளியிடவிருக்கும் அறிக்கையும் அநீதியான முறையில் விரோதப் போக்குடன்கூடியதாகவே அமையும் என சட்ட வல்லுனர் ஒருவர் கூறுகிறார்.
அத்துடன் ICG வெளியிடுவதற்கு முனையும் போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையும் கூட அநீதியானதாகவும் விரோதப் போக்குடன் கூடியதாகவே இருக்கும் என்றும் அதனை எவ்வாறு நம்புவது என அவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்த அறிக்கை நம்பகத்தன்மையுடன் கூடியதாக இருக்கவேண்டுமெனில், போர் உக்கிரமடைந்திருந்த நாட்களில் விடுதலைப்புலிகள் இழைத்த குற்றங்களையும் இந்த அறிக்கை தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும்.
விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சார்ந்தவர்களோ அல்லது அந்த அமைப்போ தற்போது இல்லாத நிலையில் அந்த அமைப்பினைத் தண்டிக்கமுடியாவிட்டாலும் விடுதலைப் புலிகள் புரிந்த குற்றங்களையும் வெளிக்கொண்டுவருவது அவசியமாகிறது.
என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. |
No comments:
Post a Comment