Friday, May 7, 2010

கருங்கல்லில் இங்க் பேனா : நாமக்கல் சிற்பி சாதனை

 
 

Human Intrest detail news

நாமக்கல்:ரெட்டிப்பட்டியை சேர்ந்த சிற்பி ஒருவர் ஒரே கல்லில் பேனா வடிவமைத்து, அதில், இங்க் நிரப்பி எழுதியும் வருகிறார்.நாமக்கல் ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சிற்பி ஜெகதீசன். இவர் கல்லில் பல்வேறு வடிவங்களை வடித்து சாதனை படைத்துள்ளார். முதலில் ஒரே கல்லில் ஆறு கன்னிகள் கொண்ட கற்சங்கிலி வடிவமைத்தார். பின், ஒரே கல்லில் 42 கன்னிகள் கொண்ட கற்சங்கிலியும், நகரும் கல்தேர் போன்றவற்றை வடிவமைத்தார்.அடுத்த கட்டமாக, கருங்கல்லில் பேனா வடிவமைத்து, அதில் எழுதி வருகிறார்.

இதுகுறித்து சிற்பி ஜெகதீசன் கூறியதாவது:நானும், எனது சகோதரரும் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சிற்பத்தொழிலுக்கு புதிய பரிமாணம் கொடுக்கும் வகையில், பல்வேறு புதிய சிற்பங்களை வடிவமைக்கிறோம். கல்லால் ஆன கற்சங்கிலி, நகரும் தேர் போன்றவற்றை வடிவமைத்தோம்.தற்போது கல்லால் ஆனா பேனா செய்துள்ளோம். அந்த பேனா 150 கிராம் எடை கொண்டது. பேனா முள், கழுத்து, இங்க் நிரப்பும் பகுதி, மூடி என ஒவ்வொன்றும் தனித்தனி கல்லால் செய்யப்பட்டது. ஒரு கிலோ எடை கொண்ட கல் 150 கிராம் போனாவாகி உள்ளது.மற்ற பேனாவைப் போல், இதில் இங்க் நிரப்பி எழுதமுடிகிறது. ஒரே நாளில் இந்த பேனா வடிவமைக்கப்பட்டது. பேனாவில் முள்ளுக்கு இங்க் வருவதற்காக உலியால் கீரப்பட்டுள்ளது. மற்றப் பேனாவைப் போல் இதில் அற்புதமாக எழுத முடிகிறது, என்றனர்.


source:dinamalar



--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails