அவசரமாக தரையிறக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை

http://www.chrisneuendorf.com/wp-content/uploads/2008/02/burka1.jpg
கொல்கத்தா, மே.6-
பர்தா அணிந்த குண்டு பயணியால் விமானத்தில் திடீர் பீதி ஏற்பட்டதால், அவசரமாக தரை இறக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடைபெற்றது.
`பர்தா பயணி'யால் பீதி
கொல்கத்தா வழியாக வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு செல்லும் `ஸ்பைஸ் ஜெட்' விமானம் நேற்று வழக்கம்போல் டெல்லியில் இருந்து புறப்பட்டது. அந்த விமானத்தில் 123 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, பர்தா அணிந்த குண்டு பயணி ஒருவரால் திடீர் பீதி ஏற்பட்டது.
அந்த பயணி ஆணாக இருக்கலாம் என்று, பயணிகளில் சிலர் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். விமானத்திலேயே அந்த பயணியை சோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், கொல்கத்தா என்.எஸ்.சி. போஸ் சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.
அவசரமாக இறக்கப்பட்டது
சில பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, கொல்கத்தா விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரை இறக்குவதற்கு விமானிக்கு அனுமதி வழங்கப்பட்டது. விமானம் தரை இறக்கப்பட்டதும், தனிமை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விமானத்தை சுற்றி வளைத்துக்கொண்டனர்.
வெடிகுண்டு சோதனை
ஆண் தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட பர்தா அணிந்த குண்டு பயணியையும், அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து இருந்த மற்றொரு பயணியும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். அவர்களிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினார்கள்.
விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் உள்ளதா என்றும் தீவிர சோதனை நடைபெற்றது. வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிந்ததும் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
source:dailythanthi
--
http://thamilislam.tk



No comments:
Post a Comment