ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop): பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம்.
குயிக் லாஞ்ச் (Quick Launch): டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.
ப்ளாக் (Flog): 'fake' மற்றும் 'blog' என்ற இரு சொற்களின் இணைந்த சொல். இதன் ஆசிரியர் என்று சொல்பவர் இதனை எழுதி இருக்கமாட்டார். அவருக்காக வேறு யாரேனும் எழுதிப் பதிந்து வைப்பார்கள்.
கிளையண்ட் (Client): கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.
source:dinamaalr
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment