இன்று தமிழருக்கு ஒரு நல்ல நாள்.இன்று நாடு கடந்து தமிழீழ மக்கள் தமக்கு என்று ஒரு அரசு அமைக்கும் ஒரு தேர்தலை நாடத்துகிறார்கள் இந்த நாடு கடந்த தமிழீழ அரசானது தமிழீழ தேசிய தலைமைக்கு பலமாகவும் தலைமையின் குறிக்கோளை நிறைவேற்றும் பாராழுமன்றமாகவும் இருக்க வேண்டும். தமிழீழ விடுதலை புலிகளினால் கொண்டு நடத்தப்பட்ட தமிழீழ தனிநாட்டு விடுதலை போராட்டம் உலக வல்லரசுகளினால் நயவஞ்சகமாக நசுக்கப்பட்டுள்ள இந்த வேளையில் தமிழீழ தேசிய தலைமை வெளியில் வராத இந்த நேரத்தில் தமிழீழ தேசிய தலைமைக்கு ஒரு பக்க பலமாக உலகிற்கு தலைமை வெளிப்படும் வேலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசு இருக்கும்.உலகிற்கு அவர்கள் தமது விடிவுக்காக போராடும் ஒரு விடுதலை வீரர்கள் என்பதை பறை சாற்றுவதாக இருக்க வேண்டும்.புலத்தில் வாழும் எங்கள் தமிழீழ மக்களே உங்களின் இந்த செயற்பாடுகள் தாயக எம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. நாடு கடந்து போனாலும் தமிழ் உணர்வு மங்கா எம் உறவுகளே உங்கள் கைகளில் எம்போராட்டம் தந்தார் எம் தலைவர்.மீண்டும் பலம் பெற்று சிங்களவன் வெறி அடக்க எம் தலைவர் வருவார் அவர் வழி சென்று இங்கே நாம் தமிழீழம் அமைப்போம் அதுவரை நாடு கடந்த தமிழீழ அரசு எம் தமிழீழத்திற்கு உலக அங்கிகாரம் வேண்டி தரும்.அதுவரை இருப்போம் தலைவன் ஆணை கிடைக்கும் அப்போது எழுவோம் தமிழீழ தனியரசை எம் தாய் நிலத்தில் அமைப்போம். உறவுகள் நாங்கள் ஒன்றாய் தனி நாட்டில் தலைவன் காலத்தில் கூடி வாழ்வோம். தமிழீழ உறவுகள் தமிழக உறவுகளின் உதவி கொண்டு தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
ஈழவேங்கை
source:uyarvu
--
http://thamilislam.tk



No comments:
Post a Comment