பெங்களூரு : எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கல்ல, பெங்களூரில்! கொஞ்சம், "ஓவரா' தெரியுதுல்லே?
பெங்களூரிலுள்ள, "போடர் ஜம்போ கிட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மழலையர் பள்ளிக்கூடத்தில், தற்போது குழந்தைகள் சேர்க்கை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில், எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கென்றே பிரத்யேக பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகளின் மனவளர்ச்சி, பேச்சுத்திறன், உடல் தகுதி போன்றவற்றை மேம்படுத்தும் விதத்தில் தினசரி பாடங்களும், பயிற்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டத்திற்கு, "மனவள மேம்பாடு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் விரும்பும் வண்ணங்களை கொண்டு, எளிமையான படங்களும், எழுத்துக்களும் உருவாக்கப்பட்டிருப்பது இந்த பாடத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். ஒரு வயதுக்குபட்ட இந்த குழந்தைகளுடன், அவர்களின் அம்மாக்களும் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும். வகுப்புகள் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை, வாரத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறும். பெற்றோர்களிடம் இந்த மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், பல்வேறு இடங்களில் இந்த பள்ளிகளை திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை மாறி போய், பள்ளிகளின் அரவணைப்பில் குழந்தைகள் வளரும் காலம் வந்து விட்டது.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment