இன்று தமிழர்கள் முழுமையான மொழி சுதந்திரம், முழுமையான நாட்டு சுதந்திரம் இல்லாமல் வாழ்கின்றார்கள். இதை சொன்னாலும் விளங்கிக் கொள்ள கூடிய நிலையிலும் அவர்கள் இல்லை.
காரணம் நமது துடிப்பான தலைமைகள் கூட சுகபோகத்திற்கு அடிமை பட்டு சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.
இப்படி 25 விகிதமானோர்கள் சுகபோகமாகத்தில் தன்னை மறந்து வாழ்ந்து கொண்டிருக்க 75 விகிதமானோர் வசதிகளற்ற சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் குடிசையிலும் வீதியோரங்களிலும் மர நிழல்களிலும் வாழ்வதை என்னவென்பது?
வுpழித்தெழு தமிழா! வுpழித்தெழு! நீ தூங்கியது போதும். இருக்கும் எச்ச சொச்சங்களும் ஒன்றொன்றாக உன்னை விட்டுப் போய் கொண்டு இருக்கிறது. சேரன், சோழன், பாண்டியன் என்ற மன்னர்கள் வாழ்ந்த காலம் எப்போது? அவர்கள் வீரத்தோடு வாழ்ந்தது உண்மையா அவர்கள் தமிழ் மொழியை வளர்த்தவர்களா என்று நம் வரலாறு கூட கேள்விக்கிடமாக போகின்றது.
அவர்கள் தமிழோடும் வீரத்தோடும் வாழ்ந்திருந்தது உண்மையானால் இன்று இவை அழிந்து கொண்டிருப்பது கண்டு துடித்து எழாமல் இருப்பது எப்படி? இன்று தமிழ் மொழி வீடுகளில் சுத்தமாக பாவனையற்று போய் கொண்டிருக்கிறது. பலர் பேசுவது தமிழ் மொழியா என்று யோசிக்கும் அளவுக்கு ஆங்கிலம் கலந்து தமிழ் வீழ்ந்நு கொண்டிருக்கின்றது. சாதாரண பாமரனும் தன் உண்ணும் சாதத்தை கூட ரைஸ் என்றும் மீல்ஸ் என்றும் கூறும் அளவுக்கு ஆங்கிலழ் எங்கும் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகி விட்டது.
ராமர் அணை என்பது தொப்புள் கொடி உறவாக ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வரை கட்டப்பட்டது என்பது வரலாற்று உண்மை. ஆனால் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தில் அந்த உறவும் பொய்யாகின்றது. இராமன் கதை கூட கற்பனை என்றும், இராமர் பாத்திரமும் கற்பனை என்றும் ஒரு தமிழர் தலைவராலேயே மறுப்பு கூறப்படுகின்றது. அதாவது இராமர் வழிபாடு, அனுமன் வழிபாடு எல்லாம் ஏமாற்று வணக்கங்களாக சித்தரிக்கப்படுகின்றது. இன்று தமிழர்களின் மொழி, வணக்க வழிபாடுகள் என்பன எல்லாம் அழிந்து போக வழி சமைக்கப்பட்டுள்ளது.
அன்று பாரதி தமிழுக்கு ஒரு விழிப்பை துடிப்பை ஏற்படுத்தினான். அதன் பின் வந்த பாரதிதாசன் "தமிழுக்கு இன்னல் என்றால் சங்காரம் நிஜம்" என்று முழங்கினான். "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!" என்ற முழக்கம் எங்கும் எழுந்தது. அந்த நேரம் தமிழ் தலைவர் பெரியார் தமிழன் வீழ்ந்த காரணத்தை ஆராய்ந்து அதனை உடைத்தெறிய சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். புpராமண, ஆரியர்களால் தமிழ் சமூதாயம் பல சாதி கூறுகளாக பிரிக்கப்பட்டதை உடைத்தெறிய தமிழர் படையை தட்டி விட்டார்.
அவரால் தளபதியென வளர்க்கப்பட்ட அறிஞர் அண்ணா என்றழைக்கப்பட்ட திரு அண்ணாதுரையால் திராவிட நாடு என்ற உணர்வு பூர்வமான கோசம் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்தது. திராவிட நாடு திராவிடருக்கே என்ற கோசம் வேகமாக வளர்ந்து வந்தது. அறிஞர் அண்ணாவின் படை வளர்ச்சியில் தந்தை பெரியாரின் இயக்கம் தொய்வடைந்தது. அறிஞர் அண்ணாவின் படையில் தமிழ் மொழி விழிப்படைந்தது. அவர் படையில் பேராசிரியர்கள், புலவர்கள், வித்துவான்கள் என்று எண்ணிலடங்காத தமிழ் இளைஞர் கூட்டம் தெருவெங்கும் தமிழ் கூட்டியது. எங்கு திரும்பிலும் தமிழ் மொழி ஓங்கி வளர்ந்தது.
அதற்கேற்ற வகையில் அவர்தம் படையில் நாவலர், நெடுஞ்செழியன், இரா சம்பந்தன், திரு ல.ப. நடராஜன், மதியழகன், ஆசைதம்பி, கவிஞர் கன்னதாசன், கலைஞர் கருணாநிதி, அன்பழகன், சீனிவாசன் என்று எண்ணற்ற தமிழர் கூட்டம் தமிழகத்தை தமிழ் மொழி உணர்வால் உயர்த்தியது. இந்நேரம் திராவிட நாடு திராவிடருக்கே என்ற கோசம் துடிப்பாக தமிழ் உணர்வுகளில் மேலோங்கியது. இந்த நேரம் இந்தியா அதாவது மத்திய அரசே கலங்கும் அளவுக்கு துடிப்பு தமிழர் உள்ளமெங்கும் உயர்ந்தது.
இந்த நேரத்தில் தமிழர் துடிப்பை அடக்கும் முறையில் வஞ்சகமான மாநில சுயாட்சி தேர்தல்; வந்தது. இந்த தேர்தலில் நம் தலைவர்களுக்கு, தி.மு.க எனும் "திராவிட முன்னேற்ற கலகம்" அதற்கு போட்டியிட எண்ணம் வந்தது. போட்டியிட்டது. திரண்ட தமிழர்கள் தி.மு.க. விற்கு வாக்களித்து அது வெற்றி பெற வழி சமைத்தார்கள்.
ஆட்சி அமைத்ததோடு எல்லாம் சரி. ஆட்சி கதிரை எல்லா சுகங்களையும் தந்தது. வந்த வழி மறந்தது. கொண்ட கொள்கை விட்டகன்றது. கை கோத்து அணைத்து வந்தவர்கள் கை விடப்பட்டார். முதலில் பிரிந்தார் இரா. சம்பந்தன். தொடந்து பிரிந்து சென்றவர் கவிஞர் கன்னதாசன். இப்படியாக தி.மு.க.வின் தாணைத் தளபதிகள் ஒவ்வொருவராக பெயர் தெரியாமல் மறைந்து போனார்கள். அண்ணாவை புற்று நோய் பறித்து கொண்டது.
அதன் பின் பிளவுகள். மக்கள் திலகமென போற்றி வளர்க்கப்பட்ட ஆ.பு.சு. வெளியே வீசப்பட்டார். தொடர்ந்து விலகியவர்கள் நாவலர் மற்றும் இரா நெடுஞ்செழியன் ஆகியோர். மற்ற தாணைத் தளபதிகள் என்ன ஆனார்கள் என்றுமறியா வகையில் அவர்கள் பெயர் மறைந்தது. தளபதிகளுக்கே இப்படியென்றால் சாதாரண தொண்டன், உணர்வு கொண்ட தமிழ் மக்களுக்கெல்லாம் என்ன நடந்து இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். வெட்கப்படும் அளவுக்கு வேதனை கொண்டோம்.
அலங்கரிக்கும் அரசியல் கதிரையின் சுகபோகத்தில் தமிழனின் விழிப்பு வீழ்ச்சி கொண்டது. வெட்கப்பட்டு வேதனைப்பட்டு வழி தடுமாறி நிற்கின்றது.
இன்று அந்த தமிழ் விழிப்பு நிலையில் வந்த தளபதிகளில் ஒருவர் மட்டும் கதிரையை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். ஆனால் தந்தை பொரியாரின் சுயமரியாதை கோசம் மட்டும் உயரவேயில்லை. இதனால் இன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் பெரியார்களை, தமிழ் அறிஞர்களை எல்லாம் சும்மா பேச்சாளர்களாகவே பார்க்கின்றனர்ஃ
இந்த நிலை மாற வேண்டும். இராமன் அணை விவகாரம் தமிழ் நாட்டையும், ஈழத்தையும் தொடர்பு கொண்ட ஒரு வரலாறு. இது கவி குளம் கட்டியதோ அணில் குளம் கட்டியதோ என்பதல்ல எங்கள் வாதம். இது எங்ள் நாட்டை சார்ந்த வரலாறு. இதன் பின்புலம் ஒரு வணக்க வழிபாடும் உண்டு. ராமர் கதை கற்பனை என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொள்வோம். அப்படியென்றால் அந்த கதையை புணைந்த வால்மிகி முனிவருக்கு கடலுக்கடியில் தமிழ் நாட்டுக்கும், ஈழ நாட்டுக்கும் இடையில் உள்ள நீருக்கடி தொடர்பை எப்படி தெரிந்து கொண்டார். அவர் கடலுக்குள் நீந்தி போய் கண்டாரா இல்லை கணணி மூலம் பார்த்தாரா?
அது போகட்டு; இலங்கை தீவில் மலை நாட்டில் ஓரிடம் உண்டு. இதற்கு நுவரெழியா என்று பெயர் இங்கு சீதா எழிய என்ற ஒரு இடம் உண்டு. இது காடும் வனமும் சேர்ந்த இடம். இந்த இடத்தில் தான் சீதையை ராவணன் சிறை வைத்திருந்தான் என்றும், இங்கு சீதா பிராட்டி குளித்த இடம், உறங்கிய இடம் என்று அடையாள படுத்தக்கூடிய கதைகளும் உண்டு. பிரிதொரு இடத்தில் விகாரை ஒன்று உள்ளது. அதற்கு "திவுருங்வெல" விகாரை என்று பெயர். அதாவது சீதை தீக்குளித்து சத்தியம் செய்தது இந்த இடத்தில் தான் என கதைகள் கூறுகின்றன. இப்படி பல அடையாள கதைகள் உண்டு. இவற்றை ஆராய்வோர் ஆராயலாம்.
ஆராய ஆயிரம் உண்டு. இன்று நமது திராவிட பெரியார் எடுத்துக் கொண்டு வெளி வந்த சுய மரியாதை இன்று உள்ளதா? தமிழனுக்கு பாரதத்தில் மரியாதை உண்டா? "கண்ணீர் துளிகள்" என அவரால் தூற்றப்பட்டவர்களாவது இன்று சுயமரியாதையை பெற்று விட்டனரா?
"தமிழ் மொழியும் தமிழ் கலை கலாசாரங்களையும் உலகம் எல்லாம் பரப்ப வழி செய்வோம"; என்ற பாரதியின் கனவு என்ன ஆனது? இந்த நேரத்தில்:-
1956ம் ஆண்டு ஈழத்திருநாட்டில் தமிழர்களின் மொழியுரிமை மறுக்கப்பட்டது. அன்று காந்தியின் வழியில் ஈழத்திருநாட்டில தந்தை செல்வநாயகத்தால் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பமானது. சுpங்கள காடையர் அதாவது சிங்கள காடையர்களால் அனுப்பப்பட்டவர்களால் கல்லெரிந்து காயப்படுத்தி அடித்து உதைத்து கலைக்கப்பட்டது. இங்கு தமிழனின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு அன்று தமிழ் நாட்டில் அண்ணாவின் தலைமையில் ஆதரவு கூட்டங்கள் நடைபெற்றன. அதில் இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அன்று பேசியதில் ஒன்றை நினைவு கூற விரும்புகின்றேன்.
"தமிழனுக்கு என்று ஒரு கொடியிருந்தால்
தமிழனுக்கு என்று ஒரு படை இருந்திருந்தால்
இன்று ஈழத்தில் தமிழர் துயர் படுவாரோ?"
என்று இள வயதின் துடிப்பின் காரணமாக அடுக்கு மொழியில் அன்று கூறியது இன்று என்ன ஆனதோ? இன்று இந்தியாவில் தமிழனுக்கு என்று ஒரு கொடியுண்டா அல்லது தனக்கென துடிப்பான படைதான் உண்டா? அன்று ஒரு படை இருந்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் இன்றும் தமிழன் வதைப்பட்டு உதைப்பட்டு வீடிழந்து நாடிழந்து உலகெங்கும் பரவி கிடக்கின்றார்கள். அதேநேரம் எஞ்சியுள்ள தமிழர்களோ படும் வதையோ சொல்லில் அடங்காது. பெரும் பெரும் கொடுமைகள் தமிழருக்கு எதிராக அரங்கேறுகின்றன.
அத்தோடு இலங்கை சிங்கள படைகளுக்கு இந்திய அரசு ஆயுத உதவிகள் செய்கின்றது. சிங்கள படைக்கு பயிற்சி வேறு அளிக்கின்றது. ஈழ தமிழர் படும் அல்லல்களை இந்தியாவில் யாரும் நினைத்தால் கூட தமிழக அரசே சட்டம் போட்டு அந்த உணர்வை அடக்குகின்றது. தமிழர் எழுச்சியை, தமிழர் விடுதலை உணர்வை சிங்கள அரசோடு சேர்ந்து அடக்குகின்றது. தமிழக இளைஞர்களோ துடிக்கின்றார்கள். முறையான தலைமையொன்றை தேடுகின்றார்கள்.
ஆனால் தமிழ் மாநில முதலமைச்சரோ அன்று மேற் கூறிய வார்த்தைக்கு உரியவரான கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் கூறியதையையே தான் மறந்து தமிழர்களை அழித்து ஒழிக்க படைக்கலங்களும் பயிற்சிகளும் சிங்கள படைகளுக்கு கொடுத்து உதவுகின்றார். உறங்கும் பூனை பொல் தான் ஒன்றும் அறியாத அப்பாவி போல் தமிழகத்திலுள்ள தமிழ் ரத்தங்களை ஏமாற்றுகின்றார்.
மற்ற துடிப்பான தலைமைகளோ தம்மத்தியில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற முதுபொழியை பின்பற்றாமல் ஒற்றுமையின்றி தனித்தனியாக இயங்குவதால் உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு நிற்கின்றோம். இன்று உலகம் தமிழர்களை பார்த்து கேலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரை இழந்து, உடமையை இழந்து, உறவுகளை இழந்து கடைசியில் பூர்வீக நிலத்தையும் இழந்து யுத்த பூமியில் செத்து மடிகிறோம். எங்கள் தொப்புள் கொடி உறவுகளெல்லாம் தவித்து மாய்கின்றன. ஆனால் தமிழனின் தலைவர் என்று கவி ஞாலம் போடுபவர் மட்டும் இன்னும் சயனத்தில். நன்றாக தூங்கட்டும். அவர் விழிக்கும் போது அவரின் நாட்காலி பறிக்கப்பட்டிருக்கும்.
—அ. சுப்பிரமணியம்–தாயகத்தில் இருந்து.
No comments:
Post a Comment