| இலங்கை வீரர்கள் தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல்? | | பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என காவல்துறையினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை மைதானத்திற்கு வரும் வழியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை அழைத்து வந்த பேருந்து லிபர்டி சௌக் பகுதியில் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூட்டிற்கு உள்ளானது. இதில் சங்ககாரா, அஜந்தா மெண்டிஸ், சமரவீரா உள்ளிட்ட 6 வீரர்கள் காயமடைந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், இலங்கை கிரிக்கெட் அணியின் மேலாளர் பிரென்டன் குருப்புவும் தெரிவித்துள்ளனர். மேலும் வீரர்களுக்கான பாதுகாப்பு பணியில் இருந்த 6 காவலர்களும் 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து காவல்துறையினருக்கு ஏற்கனவே ரகசியத் தகவல் கிடைத்ததாகவும், அதன் காரணமாகவே இன்று கிரிக்கெட் வீரர்கள் மாற்று வழியில் மைதானத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாற்ற வழியில் அழைத்து வரப்பட்ட போதும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டில் இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், முகமூடியணிந்த 2 மர்ம நபர்கள் மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தாலும், இத்தாக்குதலை வெற்றிகரமாக நடத்த 12 பேர் மைதானத்திற்கு வந்ததாக லாகூர் காவல்துறைத் தலைவர் ஹபீப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். | (மூலம் - வெப்துனியா) | | |
No comments:
Post a Comment