அமெரிக்கா:1 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அரபுநாடுகளிலும், அமெரிக்காவிலும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து நாடு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் 3 அல்லது 5 வருடத்தில் 1 லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து நாடு திரும்புவார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இந்தியர்கள், சீனர்கள் அதிகம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்காவில் தொழில்நுட்பம் தெரிந்த ஆட்கள் கிடைக்காததால் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்களை தேர்வு செய்து வேலையில் அமர்த்தினார்கள்.
ஆனால் இப்போது அமெரிக்காவிலேயே கல்வித்தரத்தை மேலும் உயர்த்தி திறமையான மாணவர்களை உருவாக்கி வரு கின்றனர். எனவே அவர்கள் படித்து முடித்து வெளியே வந்ததும் இந்த வேலைகள் அவர்களிடம் சென்று விடும். எனவே வெளிநாட்டினர் வேலை இழப்பார்கள்.
இது தொடர்பாக இந்திய அமெரிக்க தொழில்நுட்பம் சங்கம் சர்பில் ஹார்வர்டு, வெர்க்கிலி பல்கலைக்கழக ஆசிரியர்களை கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் இன்னும் 3-ல் இருந்து 5 வருடத்தில் 1 லட்சம் இந்தியர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. இதே அளவு சீனர்களும் வேலை இழப்பார்கள் என்றும் அதில் தெரிய வந்தது.
No comments:
Post a Comment