நாடாளுமன்றத் தேர்தலுக்கு இணையதளம் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்வோம் என்று பாஜக தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தமிழக மாநில தலைவர் இல.கணேசன்,
தேர்தலில் வித்தியாசமான ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இணையதளத்தின் மூலம் மக்களை அணுகுவது என்ற முயற்சியின் முன்னோடியாக பாஜக செயல்படுகிறது.
ஏற்கனவே இணையதளத்தின் மூலம் பா.ஜ.கட்சி தாமரை என்ற தொலைக்காட்சி தொடங்கியுள்ளது. இணையதளத்தின் மூலமாக குறுஞ்செய்தி அனுப்புவது போன்றவைகளை நாங்கள் ஏற்கனவே கடைபிடிக்கத் தொடங்கி விட்டோம்.
கூட்டணி ஏற்படுத்துவது தொடர்பான முயற்சிகள் வேகமாக நடக்கிறது. அதிகாரப்பூர்வமாக எந்த கட்சியும் இதுவரை எங்களை அணுகவில்லை. வருகிற 12ஆம் தேதி பாரதீய ஜனதா தேர்தல் குழு கூடுகிறது. அப்போது தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி இறுதி முடிவெடுக்கப்படும். பின்னர் வேட்பாளர்கள் பட்டியலை டெல்லிக்கு அனுப்புவோம். 15ஆம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
கூட்டணி அமைப்பதா? தனித்து போட்டியிடுவதா? என்பது பற்றி வருகிற 12ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்பட்டு விடும் என்றார்.
No comments:
Post a Comment