'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசுஇ தன்னுடைய ராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. |
இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசினோம். ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால்இ புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை. கடந்த இரண்டு மாதங் களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள் சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால்இ இதையெல்லாம் மறைத்துவிட்டுஇ 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது. இந்திய ராணுவமோ... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய ராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம்இ விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சிஇ பூநகரிஇ வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சிங்கள ராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பதுஇ எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள ராணுவம் மீட்டு வைத்திருந்தபோதுஇ பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தா என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து யானையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள ராணுவம் அஞ்சுகிறது. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திரிகோணமலை மாவட்டம் புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில்இ இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள். அவர்களைக்கொண்டு இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் ரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழுஇ ஒரு மருத்துவமனையையே நிறுவியது. இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயகஇ 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார். அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல்இ 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார். சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த ராணுவ அதிகாரி ஒருவர்இ 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய ராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னஇ 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதையை போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார். இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள்இ இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள். ''சிங்கள ராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய ராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத் தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய ராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத் தீவுக்கு அருகே நிற்கிறது. இந்தப் படைகள் ஒருசேர முல்லைத் தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால்இ இந்திய ராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள். இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன்இ 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடிஇ 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள். தமிழ் ஆர்வலர்களோஇ ''கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்... அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய ராணுவம்இ இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில்இ இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சத்தீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப் பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. 'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில்இ ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர். ஆனால் காங்கிரஸ் அரசோ ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது. மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ? |
http://www.seithy.com/breifNews.php?newsID=13078&category=TamilNews
No comments:
Post a Comment