Tuesday, March 10, 2009

கடந்த இரு மாதங்களில் 2867 பேர் வன்னியில் கொல்லப்படிருப்பதாக புலிகள் அறிவித்துள்ளனர்

 
2009ம் ஆண்டின் தொடக்கம் முதல் இன்று 10.03.2009 வரை சுமார் 2867 பேர் இறந்துள்ளதாகவும்,நேற்றைய தினம் மட்டும் 18 சிறுவர்கள் இறந்திருப்பதாகவும் நிர்வாக சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத் தாக்குதலில் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் புதுமத்தளான் பகுதிமீது இலங்கை இராணுவம் ஏவிய எறிகணை ஒன்று வெடிக்காத நிலையில் வந்து வீழ்ந்ததில் மூவர் மரணித்ததாகவும் அதில் ஒருவர் மீது எறிகணை வீழ்ந்ததில் அவர் உடல் இரு கூறாக பிளவடைந்து பரிதாபமாக இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தால் ஏவப்படும் ஆட்டிலறி வகை ஏறிகணைகள் பல வெடிக்காத நிலையிலும் கூட அவை உயிராபத்தை தோற்றுவிப்பதாக கூறப்படுகிறது. இன்றைய தினம்(10.03.2009) அதிகாலை 2.30 மணியளவில் இலங்கை இராணுவம் மீண்டும் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், பல மாதக்கணக்காக மக்கள் பதுங்கு குழிகளுக்குள் வாழ்க்கை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டிருக்கும் பருவமழை காரணமாக பதுங்கு குழிகளிலும் நீர் உட்புகுந்துள்ள போதும், மக்கள் கை கால்கள் நீரினால் விறைப்படைந்த நிலையிலும் பதுங்கு குழிகளுக்குள் இருப்பதாக விடுதலைப் புலிகளின் நிர்வாக சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.
http://www.swisstamilweb.com/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails