அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
Wednesday, September 3, 2008
அதிகாலை செய்தி எதிரொலி-கலைவாணர் வீட்டுக்கு படையெடுப்பு
அதிகாலை செய்தி எதிரொலி தி.மு.க.அதிமுக.கலைவாணர் வீட்டுக்கு படையெடுப்பு :நாகர்கோவில்செப் 3 : கண்ணீர் வடிக்கும் கலைவாணரின் வாரிசுகள் என்ற தலைப்பில் அவரதுவாரிசுகள் அவரது வீட்டுக்கு வரிகூட கட்ட இயலாமல் துயரத்தில்மூழ்கியுள்ளனர். திரைப்படத் துறையில் தனக்கென்ற ஓர் இடத்தை தக்கவைத்துக்கொண்டவர், இன்றுள்ள முன்னனி நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம்முன்னோடியாக இருப்பவர் கலைவாணர் என்.எஸ்.கே.
ஆனால் அவர் வாழ்ந்ததற்குஅடையாளமான இல்லம் இல்லாமலே போய்விடும் நிலையில் உள்ளது இன்று! என்று சில நாட்களுக்குமுன் அதிகாலையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனையடுத்து குமரி மாவட்டஅமைச்சரான சுரேஷ்ராஜனின் உதவியாளர் கலைவாணரின் வீட்டுக்குச் சென்றுஅங்கிருப்போரிடம் வரி பாக்கி விவரங்களை கேட்டு அமைச்சரிடம் தெரிவித்தார்.
அதன் பின் நிகழ்ச்சியொன்றில்பங்கேற்க வந்திருந்த அமைச்சர் சுரேஷ்ராஜன், "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்கு தற்போதுள்ள வரிப்பாக்கியைச் செலுத்த கன்னியாகுமரிமாவட்ட திமுக உதவி செய்யும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைக்கூட்டி உரிய முடிவு எடுக்கப்படும். மேலும் கலைவாணரின் வீட்டை நினைவில்லமாகமாற்ற அரசு நடவடிக்கை எடுத்தால், பல்வேறு தடங்கல்கள் வருகின்றன.வாரிசுதாரர்கள் சிலர் தங்களிடம் உள்ள கடன் தொகை குறித்தும்தெரிவிக்கின்றனர். இதனால், இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் இருக்கிறது என்றார் அமைச்சர்.
கலைவாணர் வீடு
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்ட அதிமுகநிர்வாகிகள் சிலரும் கலைவாணரின் வாரிசுகளை சந்தித்துப் பேச முயற்சிமேற்கொண்டுள்ளதாக அவரது பேரன் ராஜன் நம்மிடம் தெரிவித்தார். திமுகவோஅதிமுகவோ உதவி செய்து கலைவாணர் இல்லத்தை பாதுகாத்தால் அதுவே போதும்.உடனடி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்த அனைத்துத் தரப்பினரையும் அதிகாலைமனமாறப் பாராட்டுகிறது.
No comments:
Post a Comment