இலங்கையில் உச்சக்கட்ட போர் : 75 ராணுவத்தினர் பலி |
| |
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கிளிநொச்சி பகுதியில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதனியின் சொந்த ஊரான மல்லாவியை இலங்கை ராணுவம் பிடித்து விட்டதாகவும் ராணுவம் அறிவித்தது. வன்னோரிக்கும் அக்கராயன் பகுதிக்கும் இடையே இலங்கையின் 8,9,1 0ம் பிரிவு இலங்கை ராணுவத்தினர் ஏராளமான ஆயுதங்களுடன் முன்னேறி வந்தனர். அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி முன்னேறி வந்த ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் ஆவேசமாக எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்புக்கும் ராக்கெட், பீரங்கி தாக்குதல் நடந்தது. மாலை வரை நடந்த இந்த தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 30பேர் கொல்லப்பட்டனர். 50 ராணுவத்தினர் காயம் அடைந்தனர். ராணுவத்திடம் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள். நாச்சிகுபா பகுதியில் இருதரப்புக்கும் இடையே 2நாட்களாக விடிய விடிய சண்டை நடந்தது. இதில் 45 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மல்லாரி பகுதியை பிடித்த ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் மொத்தம் 75 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். முழங்காவில், நாச்சிகுடா, வன்னேரி பகுதிகளில் கொல்லப்பட்ட சில ராணு வத்தினர் உடல்களை விடுதலைப்புலிகள் கிளி நொச்சிக்கு கொண்டு வந்தனர். அடையாளம் தெரியாத வகையில் சிதைந்த உடல்களை விடுதலைப்புலிகளே புதைத்தனர். |
No comments:
Post a Comment