சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தினால் 2 பேர் உயிர் இழந்துள்ள நிலையில் மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனத்தில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தினால் பலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் , உயிர் இழந்தவர்களைப் பற்றிய உண்மை நிலவரங்களை சரவணா ஸ்டோர் நிர்வாகம் மூடி மறைப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எப்போதும் பரபரப்பாக மக்கள் வெள்ளத்துடன் காணப்படும் தி.நகர் ரெங்கநாதன் தெரு, இந்த தீ விபத்தால் வெறிச்சோடிக் கிடப்பதுடன் பலவியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் பெரும் அவதிக்கு உள்ளாகினர். நேற்று காலை 5.30 மணி அளவில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதில் பாத்திரக்கடையின் 5 தளங்களும் எரிந்து நாசமானது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகத் தெரிவிக்கும் நிர்வாகத்தினர், பல உண்மை நிலவரங்களை மூடி மறைப்பதாகவும்,தங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரர்களின் தொழில் போட்டியால் இந்த நாச வேலையில் சதி நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 18 மணி நேரத்துக்கு மேல் கொழுந்து விட்டெரிந்த இந்த் தீ வீபத்து காலை 10 மணிக்கு மேல் நடந்திருந்தால் ஆயிரக் கணக்கானோர் பலியாகி இருப்பார்கள் என்றும் பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சரவணா ஸ்டோர் குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் போதுமான பாதுகாப்பு வசதிகளோ அல்லது இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும்போது அதிலிருந்து தப்பிக்கவோ எவ்வித வசதிகளும் இல்லை என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தீ விபத்து சரவணா ஸ்டோர் நிறுவனதுக்கும் மட்டுமுள்ள இழப்பல்ல ஒட்டு மொத்த ரெங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பு என்றும் பல்ரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் இறந்த ஊழியர்கள் கோட்டைச்சாமி, ராமகிருஷ்ணன் ஆகியோரின் உடல்களை காணவில்லை என்று பொய்த் தகவல் சொல்லி நிர்வாகத்தினர் பலரையும் ஏமாற்றி வருவதாக குற்ற்ம் சொல்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதால் விரைவில் பலவித திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ஊடகங்களிலும் விளம்பரத்தால் வாடிக்கையாளர்களை வசப்படுத்தியிருந்த சரவணா ஸ்டோரின் போலித்தோற்றம் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாகாவே பலரும் கருதுகின்றனர். வாடிக்கையாளர்களின் பணத்தால் செல்வங்களில் கொழிக்கும் நிறுவனங்களில் அனைத்து வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளனவா? என்பதையும்,அத்துமீறும் கடைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதும் அரசாங்கத்தின் கடமை.அப்பொழுதுதான் ஷாப்பிங் போய்விட்டு பொதுமக்கள் உயிருடன் வீடு திரும்ப உத்தரவாதம் கிடைக்கும். -பழ.அசோக்குமார் |
No comments:
Post a Comment