Sunday, August 1, 2010

இந்த வார டவுண்லோட்

கிளிப் பாக்ஸில் அடுக்கலாம்


விண்டோஸ் தரும் கிளிப் போர்டுக்கு, ஒருமுறை ஒரே ஒரு டெக்ஸ்ட் அல்லது படம் மட்டுமே அனுப்ப முடியும். அடுத்த என்ட்ரி அமைக்கையில், முதலில் உள்ளது நீக்கப்படும். எனவே நிறைய தனித்தனி டெக்ஸ்ட் அல்லது படத்தினை காப்பி மற்றும் பேஸ்ட் செய்திட வேண்டுமென்றால், தனித்தனியே ஒவ்வொரு முறையும் மேற்கொள்ள வேண்டும். 
இந்தக் குறையை நீக்குகிறது கிளிப் பாக்ஸ் என்னும் புரோகிராம். இது கிளிப் போர்டின் ஒரு விரிவாக்கம் என்று கூடச் சொல்லலாம். இதில் 2,000க்கும் மேற்பட்ட விஷயங்களை காப்பி செய்து வைத்து, தேவைப்படும்போது தேவையான விஷயங்களை மட்டும் எடுத்து பேஸ்ட் செய்திடலாம். இதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. இந்த கிளிப் பாக்ஸில் டெக்ஸ்ட் என்ட்ரிகள் மட்டுமே காப்பி செய்து வைக்க முடியும். படங்கள் மற்றும் பிற விஷயங்களை இது ஒதுக்கிவிடுகிறது. 
இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த அப்ளிகேஷனை இயக்கியவுடனேயே செயல்படத் தொடங்குகிறது. இந்த சாப்ட்வேர் சிஸ்டம் ட்ரேயில் ஒரு ஐகானை அமைக்கிறது. இதனைக் கிளிக் செய்தால், கிளிப் போர்டில் உள்ள அனைத்து காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட்களைக் காட்டுகிறது. இதில் காப்பி செய்யப்பட்டுள்ள டெக்ஸ்ட்டை, காப்பி செய்திட வேண்டும் எனில் இரண்டு வழிகள் உள்ளன. அந்த டெக்ஸ்ட் இருக்கும் இடம் சென்று டபுள் கிளிக் செய்திடலாம். அல்லது கண்ட்ரோல் + சி அழுத்தலாம். வேறு ஷார்ட் கட் கீகள் எதுவும் இதில் செயல்படவில்லை என்பது சிறிய ஏமாற்றமே. 
இதில் ரைட் கிளிக் செய்தால், பல ஆப்ஷன்கள் அடங்கிய மெனு ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு டெக்ஸ்ட்டும் எப்போது கிளிப் பாக்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டது என நாள் மற்றும் நேரத்தினைத் தானாக அமைக்கும் வசதி உள்ளது. 
இந்த கிளிப் பாக்ஸ் விண்டோவினை எப்போதும் திறந்து வைத்து, வேகமாக டெக்ஸ்ட்களை எடுக்கலாம். 
கிளிப் பாக்ஸ் ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர். இதனை இது போன்ற பல அப்ளிகேஷன்களைத் தரும் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதற்கான முகவரி: http://sourceforge.net/ projects/clipbox/ஆகும்


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails